Published : 10 Mar 2014 08:38 AM
Last Updated : 10 Mar 2014 08:38 AM
தமிழகத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தேசிய கட்சிகளான காங்கி ரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத் தில் ஐந்து முனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்த லில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள திமுக, அதிமுக மட்டு மல்லாமல் பெயரளவுக்கு கட்சி நடத்துபவர்கள்கூட கைகோர்க்க இம்முறை முன்வரவில்லை. இது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி உறுதி என்று பலமாக நம்பிக் கொண் டிருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு கேட்ட தொகுதிகள் தரப்படாததால் கூட்ட ணியில் இருந்து வேறுவழியில் லாமல் அவர்கள் வெளியேற நேரிட்டது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடு கையில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி சேர்வதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இப்போது போதாத காலம்தான். அதிலும் காங்கிரஸ் நிலை மிக வும் மோசமாகிவிட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வந்தது. அக்கூட்டணியில் இருந்த திராவிடக் கட்சிகள் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதி களில் போட்டியிடும்.
இதற்கு கைமாறாக சட்டமன்றத் தொகுதிக ளில் மாநிலக் கட்சிகள் அதிக இடத்திலும், தேசியக் கட்சிகள் குறைந்த தொகுதிகளிலும் போட்டி யிடுவது வழக்கம். இப்படித்தான் மாற்றி, மாற்றி கூட்டணி அமைக்கும் போக்கு இருந்து வந்தது.
1999-ம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. மத்தியில் பலத்தைக் காட்டி அமைச்சர்களை அதிக அளவில் பெறுவதற்காக மாநிலக் கட்சிகள் அதிக தொகுதிகளில் போட்டியிடத் தொடங்கின. அதனால் அக்கட்சிகள் கொடுக்கும் தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு தேர்தலை சந்திக்கும் நிலை தேசியக் கட்சி களுக்கு ஏற்பட்டது.
பிரகாஷ் காரத் உறுதி
இடதுசாரி கட்சிகளை எடுத்துக் கொண்டால் கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்க ளிலும், மார்க்சிஸ்ட் 3 இடங்க ளிலும் போட்டியிட்டன. 2009ல் அதிமுக கூட்டணியிலும், 2004ல் திமுக கூட்டணியிலும் இருந்த கம்யூனிஸ்ட் நீண்ட நாட்களுக்குப் பிறகு, மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் ஞாயிற்றுக்கிழமை உறுதிப் படுத்தியுள்ளார்.
இதுவரை கூட்டணி அமைத்து சமாளித்து வந்த தேசிய கட்சிக ளுக்கு (பாஜக தப்பித்து விட்டது), 2014 தேர்தல் ஒரு சவால் நிறைந்ததாக மாறி யுள்ளது. இரு கட்சிகளின் தனி பலம் என்பது நிரூபிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பத்துக்கு அவை தள்ளப்பட்டுவிட்டன. தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி தற்போது உருவாகியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி தற்போது உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT