Published : 02 Mar 2015 10:39 AM
Last Updated : 02 Mar 2015 10:39 AM

நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு திட்டத்தால் 16,673 பணியிடங்கள் கலைப்பு? - கலக்கத்தில் சாலைப் பணியாளர்கள்

நெடுஞ்சாலைத் துறையில் செய் யப்படும் மறுசீரமைப்பு திட்டத்தால் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் பிரிவுகளில் 16,673 பணியிடங்கள் கலைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சாலைப் பணியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆய்வாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து கூறியதாவது:

நெடுஞ்சாலைத் துறையில் மறு சீரமைப்பு திட்டம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நெடுஞ்சாலைத் துறையில் சார்நிலை பணியாளர்கள் கணக்குப்படி கோட்ட கணக்கர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், காவலர், ஜீப் ஓட்டுநர் உள்ளிட்ட பல பிரிவுகளில் 5316 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தலைமை பொறியாளர் முதல் இளநிலை பொறியாளர் வரை மொத்தம் 8 பிரிவுகளில் 1,650 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

சாலை ஆய்வாளர்கள் நிலை -1ல் பணியிடங்கள் 600, நிலை 2-ல் 1201 பணியிடங்கள் மற்றும் சாலை பணியாளர்கள் பணியிடங்கள் 14,872 என மொத்தம் 16,673 பணியாளர்கள் குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இவர்களை பணியாளர்கள் வரிசையில் சேர்த்து கரூவூலம் மூலம் ஊதியம் வழங்க அரசாணை 51-ன் மூலம் 1977-ல் ஏற்கெனவே தெளிவுரை வழங் கப்பட்டுள்ளது.

எனவே, தமிழக முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோர் சாலை ஆய்வாளர்கள், சாலைப்பணியாளர் பணியிடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x