Published : 06 Mar 2015 09:57 AM
Last Updated : 06 Mar 2015 09:57 AM
சென்னை பெருங்குடி பஞ்சாயத்து ஆபிஸ் சாலை யில் உள்ள மாநகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வந்த சென்னை குடிநீர் வாரியத்தின் 186 எண் கொண்ட பணிமனை அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் அதே பகுதியில் உள்ள திருமலை நகர் முதல் பிரதான சாலையில் உள்ள திருமலை நகர் பூங்கா அருகில் புதிதாக கட்டப் பட்டுள்ள வாரியத்தின் சொந்த கட்டிடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படும்.
இதனால் நுகர்வோர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குறைகள் மற்றும் குடிநீர் கட்டணம்/வரி செலுத்த மேற் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு பணி மனை உதவிப் பொறியாளரின் தொலைபேசி எண் 81449 30186-ல் தொடர்பு கொள்ள லாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT