Published : 25 May 2014 10:24 AM
Last Updated : 25 May 2014 10:24 AM

தொழிலாளிக்கு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை: அரசுப் பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளிக்கு இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தாம்பரத்தை அடுத்த சிங்கப் பெருமாள்கோவிலை சேர்ந்தவர் கோபி (30). பெயின்டர். இவர் கடந்த சில மாதங்களாக நெஞ்சு வலி, மூச்சிவிட சிரமம் மற்றும் பட படப்பு போன்றவற்றால் அவதிப் பட்டு வந்தார். கடந்த மார்ச் 10-ம் தேதி இவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு வந்தார். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு, இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

அங்குள்ள டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், கோபியின் இதயத்தின் இரண்டு அறைகளுக்கு நடுவே செல்லும் வால்வின் மேல் பகுதியில் கால் சியம் படிமம் அடர்த்தியாக படிந்தி ருப்பதும், அதனால் வால்வு கெட்டி ருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவ மனை டீன் விமலா, இதய அறு வைச் சிகிச்சை துறை தலைவர் ராஜாவெங்கடேஷ் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் கே.எஸ்.கணேசன் தலைமையில் மார்ச் 29-ம் தேதி அவருக்கு அறு வைச் சிகிச்சை செய்யப்பட்டது. கோபியின் வலது மார்பகத்தின் கீழே சிறிய துளையிட்டு இந்த அறுவைச் சிகிச்சையை மேற் கொண்டனர். முதலில் அந்த துளை வழியாக ஒரு கேமராவை உள்ளே செலுத்தினர். பின்னர் டிவியில் கேமராவின் காட்சிகளை பார்த்தபடி, அறுவைச் சிகிச்சை செய்யும் நவீன கருவியை துளை வழியாக உள்ளே கொண்டு சென்றனர். இந்த அறுவைச் சிகிச்சைக்காக அவரது இதயத்தின் செயல்பாட்டை ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைத்தனர். அதன் பின், நவீன கருவியின் உதவியுடன் கெட்டுப்போன வால்வை அகற்றி விட்டு, செயற்கையாக புதிய வால்வை பொருத்தினர். சிகிச் சைக்கு பிறகு தற்போது கோபி நலமாக இருக்கிறார்.

இதுதொடர்பாக இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் கே.எஸ்.கணேசன் கூறியதாவது:

நெஞ்சை இரண்டாக பிளக் காமல், சிறிய துளையின் மூலமாக கோபிக்கு இதய அறுவைச் சிகிச்சை வெற்றிக்கரமாக செய்யப் பட்டுள்ளது. தற்போது கோபி நலமாக இருக்கிறார். அறு வைச் சிகிச்சை முடியும் வரை, அவருடைய இதயம் வெளியே இருந்த கருவியின் மூலமாக இயக்கப்பட்டது. அறு வைச் சிகிச்சை முறையாக நடை பெறுகிறதா என்பதை ரூ.15 லட்சத்தில் புதிதாக வாங்கப் பட்ட கருவி மூலமாக கண்காணிக் கப்பட்டது.

இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்த மருத்துவமனையில் முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இல வசமாக செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x