Last Updated : 16 Mar, 2015 10:21 AM

 

Published : 16 Mar 2015 10:21 AM
Last Updated : 16 Mar 2015 10:21 AM

கடந்த 2 மாதங்களில் 1,012 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு: நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம்

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங் களில் மட்டும் 1,012 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் உயிரி ழந்துள் ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அரசு மருத்துவ மனைகளில் கொசு வலையுடன் கூடிய டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. டெங்கு உள் ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக் கப்பட்டது. சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனம் முழுவதும் பன்றிக் காய்ச் சலை தடுப்பதிலேயே இருந்த தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது. கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 1,938 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,012 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 197 பேரில் ஒருவர் இறந்தார்.

கர்நாடகத்தில் 136 பேர், புதுச்சேரியில் 119, மகாராஷ்டிரத் தில் 118, குஜராத்தில் 113, மேற்கு வங்கத்தில் 85, ராஜஸ்தானில் 39, ஆந்திரத்தில் 32, ஒடிஸாவில் 27, மத்தியப் பிரதேசத்தில் 19, தெலங்கானாவில் 15, கோவாவில் 12, அந்தமான் - நிக்கோபரில் 6, உத்தரப் பிரதேசத்தில் 4, டெல்லி மற்றும் ஜார்க்கண்டில் தலா 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டுள்ளனர் என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

மத்திய சுகாதார அமைச்ச கம், ஒவ்வொரு மாநிலத்தின் பரப் பளவு மற்றும் மக்கள் தொகையை கணக்கில் வைத்து முறையாக கணக்கிடுவதில்லை.

தங்களுக்கு வரும் தகவல் களை மட்டும் அப்படியே வெளி யிடுகின்றனர் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 60 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. காய்ச்சல் பாதிக்கப்பட்ட அனைவரையும் பரிசோதனை செய்கிறோம்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் மற்றும் இறப்புகளை முழுமையாக வெளியிடுகிறோம். மத்திய அரசுக் கும் தெரிவிக்கிறோம்.

ஆனால், மற்ற மாநிலங்கள் டெங்கு பாதிப்பு குறித்த விவரங்களை முழுமையாக வெளியிடுவதில்லை. அதனால், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இருப்பதுபோல தெரிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x