Published : 10 Mar 2015 11:03 AM
Last Updated : 10 Mar 2015 11:03 AM

மன்சூர் அலிகான் பட ஷூட்டிங்: ‘பெப்ஸி’ நிர்வாகிகள் தலையிட இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் மன்சூர்அலிகான் நடித்து, இயக்கும் ‘அதிரடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தலையிடுவதற்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன (பெப்ஸி) நிர்வாகிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர்அலிகான் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்காக போட்டியிட்டேன். அதனால், ‘பெப்ஸி’ செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் எனது சினிமா படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தப் படத்துக்காக கதாநாயகிகள் மவுமிதா, பூவிசா, சஹானா உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கு பெருமளவு தொகை கொடுத்துள்ளேன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 முறை படப்பிடிப்பு நடந்தபோது பெப்ஸி நிர்வாகிகள் தொழில்நுட்ப கலைஞர்களை மிரட்டியதுடன், படப்பிடிப்பு குழுவினரையும் பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதனால், ரூ.25 லட்சம் வரை எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். எனவே, ‘அதிரடி’ சினிமா படப்பிடிப்பில் பெப்ஸி நிர்வாகிகள் தலையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மன்சூர் அலிகான் கோரியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, ‘அதிரடி’ படப்பிடிப்பில் தலையிடுவதற்கு பெப்ஸி நிர்வாகிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x