Published : 06 Mar 2015 09:35 AM
Last Updated : 06 Mar 2015 09:35 AM
வெற்றித் தோல்விகளையெல்லாம் மனதில் கொள்ளாமல், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் ஒற்றுமையுடன் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றார் திமுக தலைவர் கருணாநிதி.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தும் தமிழகம் சார்ந்த- தென்னகம் சார்ந்த- இந்தியாவிலே தழைத்தோங்க வேண்டுமென்று நாம் கருதுகிற பல பொதுவான கொள்கைகளையெல்லாம் உள்ளடக்கிய தீர்மானங்களாகும்.
இவை எல்லாம் நாமே முன்னெடுத்துச் சென்று தமிழக மக்களுக்கு, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமென்று எடுத்துக்காட்டக் கூடிய தீர்மானங்களாகும்.
கட்சித் தேர்தல்கள் முடிந்துவிட்டன. உள்கட்சிப் பிரச்சினைகள் ஒழிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் திமுக என்ற உணர்வு வர வேண்டும். பெரியார், அண்ணா வழி நின்று நாம் அனைவரும் கட்டிக் காத்து வரும் இந்தக் கட்சி ஒருநாளும் தேயாது, மாயாது.
நாம் தொடர்ந்து நம்முடைய பணிகளை ஆற்ற வேண்டும். நடைபெற்ற ரங்கம் இடைத்தேர்தலாக இருந்தாலும், நடைபெற்ற உட்கட்சித் தேர்தல் களானாலும் சரி, அந்தத் தேர்தல் களில் ஏற்பட்ட வெற்றித் தோல்வி களையெல்லாம் மனதிலே வைத்துக் கொள்ளாதீர்கள். மறந்துவிடுங்கள். மீண்டும் வெற்றி பெறுவோம்.
உள்கட்சித் தேர்தலை மனதிலே எண்ணி அதற்கு யாரையாவது பழி வாங்க வேண்டுமென்று யாரும் கருதாதீர்கள். எதிர் காலத்தில் நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தச் சமுதாயம் இருக்க வேண்டும். சமுதாயத்தின் புகழ் இருக்க வேண்டும். நம்முடைய இலக்கியங் கள் காப்பாற்றப்பட வேண்டும்.
தேர்தல் முக்கியமல்ல;
நான் இப்படிச் சொல்வது வார்த்தைக்காகத்தான். நமது லட்சியத்திலிருந்து நாம் பின்வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருங்கள். ஒற்றுமையாக இருங்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அதோடு ஒற்றுமையுடன் சேர்ந்து அனைவரும் கட்சிப் பணியாற்ற வேண்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT