Published : 10 Mar 2015 10:26 AM
Last Updated : 10 Mar 2015 10:26 AM

மாவோயிஸ்ட்களை கண்காணிக்க புதிய உத்தி: ஆதிவாசி இளைஞர்களைப் பயன்படுத்த ‘க்யூ பிராஞ்ச்’ திட்டம்?

கோவை மாவட்டம் ஆனைகட்டியை அடுத்துள்ள அட்டப்பாடி பகுதியில் உள்ள மல்லீஸ்வரன் மலைகளில் கடந்த ஆண்டு புதிய நபர்கள் சிலர் துப்பாக்கிகளுடன் தென்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மாவோ யிஸ்ட்கள் போன்ற தீவிரவாதக் குழுக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகக் கருதி போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழக போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். தமிழக வனத் துறையினரும் மலைகிராமங்களில் ஆதிவாசி மக்களை சந்தித்து புதிய வர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே போலீஸ், வனத்துறைக்கு தகவல் தர வலியுறுத்தினர். ரகசிய போலீஸார், குறிப்பாக க்யூ பிராஞ்ச் போலீஸாரும் ஒவ்வொரு கிராமங்களிலும் தீவிரவாதக் குழுக்களின் நடமாட்டம் குறித்து 6 மாதங்களுக்கு மேலாக விசாரித்து வருகின்றனர். தீவிரவாதக் குழுக்களின் நடமாட்டத்தை அறிய ஆதிவாசி இளைஞர்களைப் பயன்படுத்த திட்டமிட்டு, பணி வாய்ப்பு ஏற்படுத் தித் தர விண்ணப்பங்கள் பெறுவதாக வும் மலைவாழ் மக்கள் தெரிவிக் கின்றனர்.

இதுகுறித்து மலை கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூறியது:

‘கேரளாவின் அட்டப்பாடி பகுதி யில் உள்ள மலை கிராமங்களில்தான் மாவோயிஸ்ட் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்களின் நடமாட்டம் உள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் தங்கள் பணியை செய்ய முடியாத வனத் துறையினர், மலைவாசி இளைஞர்களையே வேட்டைத் தடுப்புக் காவலர்களாக நியமித்து தொகுப்பு ஊதியம் தர ஆரம்பித்தனர். இதனால் வனத் துறையினருக்கும், ஆதிவாசி மக் களுக்கும் இவர்களே பாலமாக விளங்க ஆரம்பித்தனர். தற்போது மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாதக் குழுக்களைக் கண்காணிக்கவும், விசாரிக்கவும் வரும் உளவுப் பிரிவு போலீஸார், இந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உதவியை நாட வேண்டி உள்ளது. அவர்களோ வனத் துறையினர் சொன்னால்தான் எதையுமே இவர்களிடம் பேசுகிறார் கள். எனவே க்யூ பிராஞ்ச் போலீஸா ருக்கு வனத்துறை உதவி தேவை யாக இருக்கிறது.

வன கிராமங்களில் தகவல் பெறுவ தில் உள்ள சிக்கல் காரணமாக வனத் துறையின் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் போன்று உளவுப் போலீஸிலும் படித்த மலை கிராம ஆதிவாசி இளைஞர்களை சேர்ப்பது என்று முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதற்காக ஒவ்வொரு மலைக் கிராமத்திலும் 10 மற்றும் பிளஸ் டூ படித்த இளைஞர்களை இனம் கண்டு விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர் க்யூ பிரிவு போலீஸார்.

இவர்களுக்கு மலை கிராம மக்களிடம் தொடர்புள்ள தன்னார்வ தொண்டு அமைப்பினர், அரசியல் கட்சியினர் உதவி செய்து வருகின்றனர் என தெரிவித்தனர்.

இதுகுறித்து உளவுத்துறை போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘மலைவாசி இளைஞர்களை போலீஸ் பணியில் சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை.

ஆனால் ஊர்க்காவல் படை யினர் போன்று மலை கிராமங் களில் படித்த இளைஞர்களை சேர்த்து வனப் பகுதிகளில் சமூக விரோத சக்திகளை கண்காணிக் கும் பணியில் போலீஸாருக்கு உதவியாக ஈடுபடுத்தலாம் என்ற எண்ணம் உள்ளது’ என்றனர்.

அட்டப்பாடி செல்கிறது உண்மை அறியும் குழு

அட்டப்பாடி கிராமத்தின் உண்மை நிலவரத்தை விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக தமிழகத்திலிருந்து 12 பேர் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று அடுத்த வாரம் அங்கு செல்கிறது.

பொள்ளாச்சி அருகே கேரள எல்லைக்குள் வரும் அட்டப்பாடி கிராமத்தில் தமிழர்கள் சுமார் முப்பதாயிரம் பேர் வசிக்கின்றனர். இதில்லாமல், தமிழ் பேசும் பழங்குடியின மக்களும் அங்கு வசிக்கின்றனர். அட்டப்பாடியிலிருந்து தமிழர்களை கேரள அரசு வெளியேற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தற்போது மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாகக் கூறி அட்டப்பாடி பகுதியை ‘தண்டர் போல்ட்’ என்கிற அதிரடிப் படையினரின் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் அட்டப்பாடியின் உண்மை நிலவரத்தை விசாரிப்பதற்காக உண்மை அறியும் குழு ஒன்றை அடுத்த வாரம் அங்கு அனுப்புகிறது கேரள தமிழர் கூட்டமைப்பு. இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘‘அட்டப்பாடியிலிருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்கில் இப்போது மாவோயிஸ்ட் என்ற ஆயுதத்தை கேரளம் கையில் எடுத்துள்ளது. அட்டப்பாடி தமிழர்கள் யாருக்கும் ஐந்து ஏக்கருக்கு மேல் அங்கு நிலம் இல்லை. அவர்கள் 2 ஏக்கர் நிலத்தை மட்டும் வாழ்வாதாரத்துக்காக வைத்துக் கொண்டு மற்றதை எல்லாம் அரசிடம் ஒப்படைக்கத் தயாராக உள்ளனர்.

ஆனால், நிலங்களை முற்றிலுமாக பறித்துக் கொண்டு அவர்களை அகதிகளாக அங்கிருந்து விரட்ட நினைக்கின்றனர். அதற்காகத்தான் பத்தாண்டுகளுக்கும் மேலாக நில வரி வசூலிக்காமல் உள்ளனர்.

இப்படி அட்டப்பாடி தமிழர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே உண்மை அறியும் குழுவை நாங்கள் அங்கு அனுப்புகிறோம். இந்தக் குழுவினர் தரும் அறிக்கையை தமிழக - கேரள முதல்வர்களிடம் அளிப்பதுடன் உச்ச நீதிமன்றத்திலும் முறையீடு செய்வோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x