Published : 10 Mar 2015 11:36 PM
Last Updated : 10 Mar 2015 11:36 PM
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை மேலும் 3 மாதம் அவகாசம் வழங் கியது. இந்த வழக்கில் குற்ற வாளிகளை நெருங்கிவிட்டதாக சிபிசிஐடி தரப்பில் உயர் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 22.3.2012 அன்று வீட்டில் இருந்து நடைப்பயிற் சிக்குச் சென்றபோது காவிரி ஆற்றின் ஓரத்தில் கொலை செய் யப்பட்டுக் கிடந்தார். அவரது கொலை குறித்து சிபிசிஐடி போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசார ணைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், என் கணவர் கொலை வழக்கு 22.6.2012 அன்று சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டது. விசாரணை மாற்றப் பட்டு 32 மாதங்கள் ஆகியும் இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல்களை எங்கள் குடும்பத்தினர் தெரி வித்தும் போலீஸார் கைது செய் யாமல் உள்ளனர். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீஸாருக்கு 3 மாதம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்த ரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர் சி.ரமேஷ், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாதி டும்போது, ராமஜெயம் கொலை யில் தொடர்புடைய குற்றவாளி களை போலீஸார் நெருங்கி விட்டனர். விசாரணை இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்க மேலும் 6 மாத காலம் அவகாசம் தர வேண்டும் என்றார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீ ஸாருக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT