Published : 08 May 2014 11:22 AM
Last Updated : 08 May 2014 11:22 AM
சென்னை தி.நகரில் பொதுமக்கள் நடக்கும் இடங்களில் வாகனங் களை நிறுத்தி வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால் நடக்க முடியாமல் சிரமப்படும் பொது மக்கள் இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறு கிறார்கள்.
சென்னையில் ஷாப்பிங் என்றாலே தி.நகர்தான் நினை விற்கு வரும். சாதாரண பொருளில் இருந்து விலை உயர்ந்த பொருட் கள்வரை அனைத்தையும் அங்கே வாங்கிவிடலாம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் தி.நகருக்கு வந்து போகிறார்கள். வார விடுமுறை நாட்கள், தீபாவளி, பொங்கல் போன்ற சீசன்களில் இது சில லட்சங்களாக இருக்கும்.
தி.நகருக்குவரும் பொது மக்கள்சந்திக்கும் பிரச்சினைகள் சமீப காலங்களில் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒருபக்கம் தி.நகர் ரெங்கநாதன் தெருவிலுள்ள பெரிய கடைகள் நடைபாதைவரை பொருட்களை பரப்பி வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டன. இதனால் ரெங்கநாதன் தெரு சுருங்குவதும் பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்போது சரி செய்யப்படுவதும், மறுபடி யும் பழையபடி ஆக்கிரமிக்கப் படுவதும் தொடர் கதையாகவே உள்ளது.
இது தவிர ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, துரைசாமி பாலம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய அடுக்குமாடி கடைகளில் பார்க்கிங் வசதியும் அறவே இல்லை. இது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தொல்லையை ஏற்படுத்துகிறது. பார்க்கிங் வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் வண்டிகளை நடைபாதைகளிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் கூடுகிற மாலை நேரங்களில் நடக்கக்கூட முடியாத நிலை உள்ளது. இதுமட்டுமன்றி நடேசன் தெரு, பனகல் துரைசாமி பாலம் சாலை ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்கு முன்பாக கார்களை நிறுத்துவதால் தினசரி அந்த இடம் சண்டைக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது.
வாகன பிரச்சினை குறித்து ரெங்கநாதன் தெருவிற்கு ஷாப்பிங் வந்த விஜயலட்சுமி என்பவர் கூறுகையில், “ஆட்டோக் கள், கார்கள், இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டி வரும் பலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கண்ட இடங் களில் வாகனங்களை நிறுத்திவிடு கிறார்கள். கடந்த 2 நாட்களாக மழை வேறு பெய்வதால் தி.நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் நடக்கும்படியாக இருக்கும் கொஞ்சம் இடங்களிலும் வாகனங் கள், நடைபாதைக் கடைகள் உள்ளன” என்றார்.
ஒருபக்கம் வாகன ஓட்டிகள் மீது குறை சொல்லப்பட்டாலும். அடுக்குமாடி கடைகளில் பார்க்கிங் வசதி இல்லாததால்தான் இவ் வளவு பிரச்சினைகளும் ஏற் படுவதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அன்சாரி என்னும் வாகன ஓட்டி கூறுகை யில், “தி.நகரில் உள்ள பெரிய அடுக்குமாடி கடைகளில் பார்க் கிங் வசதி கிடையாது. வேறு வழியில்லாமல் வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு சென்றால் அவற்றை காவல்துறையினர் எடுத்துச் சென்றுவிடுகின்றனர். பார்க்கிங் வசதி இல்லாமல் கடைகள் இயங்கக்கூடாது என்று கட்டாயமாக்கினால்தான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்” என்றார்.
இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “தி.நகரில் பார்க்கிங் உட்பட பல்வேறு திட்டப்பணிகளுக்காக சென்னை மாநகராட்சி உலக வங்கியிடம் ரூ.50 கோடி நிதியுதவி கோரியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் உலக வங்கியிடமிருந்து நிதி யுதவி கிடைத்துவிடும். அதைத் தொடர்ந்து பார்க்கிங் கட்டிடம், நடைபாதை சீரமைப்பு போன்ற பணிகளுக்கான வேலைகள் தொடங்கப்படும். இதுபற்றிய விரிவான விவரங்களை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு முறை யாக அறிவிப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT