Published : 13 May 2014 10:00 AM
Last Updated : 13 May 2014 10:00 AM
இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர நாளை (புதன்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
‘டயட்’ நிறுவனங்களில் 4,800 இடங்களும் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 720 இடங்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6,540 இடங்களும். தனியார் பயிற்சிப் பள்ளிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
இவற்றில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் இடங்களுக்கு 2014-15ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் நாளை (புதன்கிழமை) முதல் ஜூன் 2-ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. ‘டயட்’ மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் வி்ண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.250 மட்டும். கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளளாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT