Published : 04 Mar 2015 09:09 AM
Last Updated : 04 Mar 2015 09:09 AM

சாலை விபத்தில் உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பொறியாளரின் குடும்பத் துக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரத்து 441 நஷ்டஈடு வழங்க சிறுவழக்குகளுக்கான நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சுவாமிநாதன், சந்திரா தம்பதியின் மகன் ஷியாம்சுந்தர் (வயது 26). மென்பொருள் பொறி யாளரான இவர், 2012-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி வளசரவாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தங்களது மகன் உயிரிழந்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்கு ரூ.1.75 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறுவழக்குகளுக்கான நீதிமன்றத் தில் ஷியாம்சுந்தரின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி எஸ்.டி.பரிமளா இவ்வழக்கை விசாரித்தார். இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சாலை விபத்தில் பலி யான ஷியாம் சுந்தர் இளம் பொறியாளராக இருந்திருக்கிறார். அவர் மாதம் ரூ.70,695 சம்பாதித் திருக்கிறார். அவர் வெளிநாடு செல்லவும், பதவி மற்றும் சம்பள உயர்வு பெறவும் வாய்ப்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பதால், ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் அவரது பெற்றோருக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரத்து 441 நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த தொகையை 2013-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதியில் இருந்து ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி கணக்கிட்டு வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x