Published : 30 Mar 2015 10:47 AM
Last Updated : 30 Mar 2015 10:47 AM
தமிழகத்தின் மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை விபத்தைத் தவிர்ப்பதற்காக போடப்பட்டுள்ள வேகத் தடைகள், விபத்துகளைக் குறைப்பதற்குப் பதிலாக பலரது வாழ்க்கையில் வேதனைகளை ஏற்படுத்தியிருப்பதுதான் அதிகமாக உள்ளது.
சாலைகளில் ஏற்படும் விபத்து களைத் தடுக்க வேகத் தடைகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 90 சதவீத வேகத் தடைகள் தாறுமாறான வகையில் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும், தடுமாற்றத்தால் விபத்துகளையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
பழைய பாலங்களில் 20 அடி தூரத்துக்கு ஒரு வேகத் தடையாக, பேட்ச் ஒர்க் போடப்பட்ட இடங்கள் உள்ளன. பெரிய பாலங்களைக் கடப்பதற்குள் குறைந்தது 10 முதல் 20 பேட்ச் ஒர்க் தடைகளில் இருசக்கர வாகனங்கள் ஏறி இறங்கி னாலே போதும், தோள்பட்டை வலியெடுத்துவிடும். முதியவர்களின் நிலையை சொல்லத் தேவையில்லை.
தேசிய நெடுஞ்சாலைகள் முதற் கொண்டு கிராமச் சாலைகள் வரை அதன் குறுக்கே அமைக்கப்படும் வேகத்தடைகளில் பெரும்பாலா னவை இந்திய சாலைகள் காங்கிரஸ் வகுத்த விதிமுறைகளின்படி அமைக் கப்படுவதில்லை.
வேகத்தடைகள் அமைக்கும் போது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அனுமதி பெறவேண்டும் என்ற விதி பின்பற்றப்படுவதில்லை.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த சாலை பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் கூறியபோது, “ஒவ்வொரு சாலையிலும் மக்கள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் வேகத் தடைகள் அமைத்துள்ளனர். இந்த வேகத்தடைகள் சாலையின் குறுக்கே ஒரு மரத்தை வெட்டிப் போட்டதற்கு சமமாக உள்ளன. மேலும், சாலையின் குறுக்கே வேகத்தடை உள்ளது என்பதை குறிக்கும் வகையிலான அடையாள குறியீடுகள் எதுவும் இல்லாததால் பலர் வேகத்தடையில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
என் நண்பர் ஒருவருக்கு முதுகெலும்பே முறிந்துவிட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் பாலானோருக்கு இடுப்பு வலி ஏற்படு கிறது.
பேருந்துகளில் செல்பவர்களின் நிலையோ பரிதாபம். கர்ப்பிணிகள் படும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல. மோசமான வேகத்தடை களால் வாகனங்கள் சேதமடைவதும், அதை பராமரிக்க ஆகும் செலவும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
எனவே, வேகத்தடை பிரச்சினைக்கு நெடுஞ்சாலைத் துறை தீர்வு காணவேண்டும்” என்றார்.
வேகத்தடைக்கான வரைமுறைகள்
இந்திய சாலைகள் காங்கிரஸ் அமைப்பு விதிமுறைப்படி, வேகத் தடைகள் அமைக்கும்போது, 10 செ.மீ. உயரம் கொண்டதாகவும், 3.7 மீட்டர் அகலம் கொண்டதாகவும் அமைக்க வேண்டும். இந்த வேகத் தடைகள் மீது பிரதிபலிக்கக்கூடிய வகையிலான வண்ணம் பூசப்பட்டி ருக்க வேண்டும். வேகத் தடைகள் இருப்பதை முன்கூட்டியே வாகன ஓட்டிகள் உணரும் வகையில், வேகத் தடைகள் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 40 மீ. தூரத்தில் எச்சரிக்கை பலகையும் அதில், ஒளி ரும் வகையில் வண்ணமும் பூசப் பட்டிருக்க வேண்டும்.
அறிவிக்கப்படாத நிறுத்தங்கள்
பல இடங்களில் இந்த வேகத் தடைகளை அறிவிக்கப்படாத பேருந்து நிறுத்தங்களாகவே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் ஏறுவதும், ஓட்டுநர், நடத்துநர்களிடம் சொல்லாமலேயே பேருந்திலிருந்து இறங்குவதும் இதுபோன்ற வேகத் தடைகளில் நடைபெறும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
இதனாலும் விபத்து நேரிட வாய்ப்புகள் உள்ளன. மாநில நெடுஞ் சாலைத் துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT