Published : 06 Mar 2015 08:31 AM
Last Updated : 06 Mar 2015 08:31 AM

அரியலூரில் பள்ளி வேன் மீது லாரி மோதல்: 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

அரியலூரில் பள்ளி வேன் மீது டிப்பர் லாரி மோதியதில் 2 குழந்தை கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் தனியார் சிமென்ட் ஆலையால் நிர்வகிக் கப்படும் சிபிஎஸ்இ பள்ளி செயல்படுகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் எல்.கே.ஜி. பயிலும் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்ட வேன் அரியலூர் நகருக்குப் புறப்பட்டது.

சந்திரசேகர் என்பவர் வேனை ஓட்டினார். உதவியாளர் வாசுகி உடனிருந்தார்.

இந்த வேன் கல்லங்குறிச்சி சாலையைக் கடந்தபோது, சிமென்ட் ஆலைக்காக சுண்ணாம் புக்கல் ஏற்றிவந்த டிப்பர் லாரி, பள்ளி வேன் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அடியில் சிக்கிய வேனுடன் அருகில் உள்ள வறண்ட குளத்துக்குள் சென்று நின்றது.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த, சவுந்தரராஜன் மகள் சூர்யா (4), தினகர் மகள் சாய்னா ஜோதி (4), வேன் ஓட்டுநர் சந்திரசேகர் (48), உதவியாளர் வாசுகி (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர் கள் 4 பேரும் அரியலூரைச் சேர்ந்தவர்கள்.

பலத்த காயமடைந்த கொளஞ்சி மகள் அபிநயா (4), ரவிக்குமார் மகள் கீர்த்திபிரியா (4) ஆகியோர் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், சரவணன் மகன் இனியவன் (4), குமார் மகன் சசிதரன் (4) ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். மேலும், லாரி மோதிய வேகத்தில் வேனிலிருந்து தூக்கி வீசப்பட்ட 3 குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தலைமறைவான டிப்பர் லாரி ஓட்டுநர் சசிக்குமாரை, அரியலூர் போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர்.

அரியலூரில் புறவழிச் சாலை களில் சிமென்ட் ஆலைக்குச் செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகப் புகார் தெரிவித்த பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூரில் நேற்று மாலை விபத்துக்குள்ளான டிப்பர் லாரி மற்றும் பள்ளி வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x