Published : 16 Mar 2015 11:08 AM
Last Updated : 16 Mar 2015 11:08 AM
உடன்குடி மின்திட்ட கட்டுமானப் பணிகளை தொடங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் உடன் குடியில் 1,320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலை யத்தை அமைப்பதற்காக இரு நிறுவனங்களிடமிருந்து பெறப் பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்ய தமிழ்நாடு மின்சார வாரி யம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தவறானது. உடன்குடி மின் திட்டத்துக்கான ஒப்பந்த நடை முறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
2007-ம் ஆண்டில் அறிவிக்கப் பட்ட இந்த மின் திட்டத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் 2011 அல்லது 2012-ம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும். ஆனால், அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த திட்டம் முழுவட்டம் அடித்து தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறது. இதற்காக இது வரை ரூ.80 கோடி வீணாக செலவழிக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்தம் வழங்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம். திட்டப் பணிகளை முடிக்க மேலும் 5 ஆண்டுகள் ஆகலாம் என்பதால் 2023-ம் ஆண்டுக்கு முன்பாக உடன் குடி மின் திட்டத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வாய்ப்பு இல்லை. இதுபோன்ற மின்திட்டங்களை நிறைவேற்றாமல் தடுப்பதன் மூலம் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் ரூ.15.10 என்ற விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்யவேண்டி வரும்.
இதனால் மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை எல்லாம் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி நுகர்வோர்கள் தாங்கிக் கொள்ள வேண்டிவரும். எனவே, உடன்குடி மின்திட்டத்தின் ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட்டு, தகுதியான நிறுவனத் துக்கு உடனடியாக ஒப்பந்தம் வழங்கி கட்டுமானப் பணிகளைத் தொடங்க தமிழக அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT