Published : 09 May 2014 10:11 AM
Last Updated : 09 May 2014 10:11 AM
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் கு.தேவராஜன் தேர்வு முடிவு மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.
தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டு 8.45 லட்சம் பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி 15-ம் தேதி வரை நடந்தது. முன்னரே அறிவித்தபடி இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு வெளியிடப்பட்டது.
90.6 சதவீத தேர்ச்சி
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 87.4% மாணவர்களும், 93.4% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%ஆகும். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
சுஷாந்தி முதலிடம்
மாநில அளவில் முதலிடத்தை, தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுஷாந்தி பிடித்துள்ளார். அவர் 1,200க்கு 1,193 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாநிலத்தில் இரண்டாவது இடத்தை 1200-க்கு 1,192 மதிப்பெண்கள் பெற்று தர்மபுரி ஸ்ரீவிஜய விடிஎம் வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை 1191 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் துளசிராஜனும், சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்யாவும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 4,94,100 மாணவர்கள் 60%-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200 மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்:
இயற்பியல்- 2,710
வேதியல்- 1,693
உயிரியல்- 652
தாவரவியல்- 15
விலங்கியல்- 7
கணக்கு- 3,882
கணினி அறிவியல்- 993
வணிகவியல்- 2,587
கணக்கு பதிவியல்- 2,403
வணிக கணிதம்- 605
கணித தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
மருத்துவராவதே லட்சியம்: சுஷாந்தி
மாநிலத்தில் முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஊக்குவிப்பே வெற்றிக்கு காரணம். இந்த வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மருத்துவராவதே என லட்சியம் என மாணவி சுஷாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் அல்லாத வேறு மொழிப்பாடங்கள் படித்து முதலிடம் பிடித்தவர்கள்:
சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக கொண்டு தேர்வு எழுதியவர்களில் ஈரோடு பாரதிய வித்யா பவன் மாணவி விஷ்ணுபிரியா, திருச்சி எஸ்.வி.இந்து பெண்கள் பள்ளி மாணவி பி.ஆனந்தி ஆகியோர் 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தனர்.
பிரெஞ்ச் மொழியை மொழிப்பாடமாக கொண்டு தேர்வு எழுதியவர்களில் சேலம் கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவர் ஸ்ரீராம், நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவி நிரோஷினி 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தனர்.
ஜெர்மன் மொழிப்பாடத்தை கொண்டு தேர்வு எழுதியவர்களில் சென்னை தி.நகர் வித்யோதயா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி கனகபிரியா பார்த்திபன் 1191 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
அரசு, மாநகாரட்சி பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:
பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 84.54%. அரசுப் பள்ளிகளில் மாணவிகள் 88.70% பேரும் மாணவர்கள் 79.30% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநகராட்சிப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 90.90%. மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவிகள் 93.39% பேரும் மாணவர்கள் 85.77% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆதிதிராவிட நலவாரிய பள்ளிகள் மொத்த தேர்ச்சி விகிதம் 81.18%. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மொத்த தேர்ச்சி விகிதம் 96.56%. முனிசிபாலிட்டி பள்ளிகள் மொத்த தேர்ச்சி விகிதம் 84.95%.
வருவாய் மாவட்டங்கள் வாரியாக முதலிடம் பிடித்தவர்கள்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹீப்ரான் பள்ளி மாணவி ஆர்.மிருனாளினி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஜெ.எஸ்.ஜூப்ளி பள்ளி மாணவி பாலப்பிரியா 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பானுமதி, மரியா சைனி கமலசந்திரிகா, புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாய் குமார் ஆகியோர் 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சையத் அம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி மில்கச் காட்பெல் 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
சிவகங்கையில் மகரிஷி வித்மன் பள்ளி மாணவர் 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் ராஜபாளையம் பி.ஏ.சி.எம். பள்ளி மாணவர் ஞானவேல்ராஜா 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தேனியில் மேரி மாதா மெட்ரிக் பள்ளி மாணவி ரக்ஷணா 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
மதுரையில் சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி மாணவி லலிதா 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
ஊட்டி கிரசெண்ட் பள்ளி மாணவர் முகமது எஸ்ஸார் 1186 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார்.
திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ஆர்.ஜி.எம். பள்ளி மாணவி ப்ரீதி 1187 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார்.
கோவையில் வித்யா விகாஸ் பள்ளி மாணவி மேகலா 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
ஈரோட்டில் ஏ.கே.ஹெச்.என். பள்ளி மாணவர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
சேலத்தில் எஸ்.ஆர்.கே. மெட்ரிக் பள்ளி மாணவர் கந்தநிவராஜ் 1190 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் துளசிராஜன் 1191 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாநிலத்தில் மூன்றாவது இடமும் பிடித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஸ்ரீவித் மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாநிலத்தில் முதல் இடமும் பிடித்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் ஸ்ரீவிஜயா விடிஎம் மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும் மாநிலத்தில் இரண்டாவது இடமும் பிடித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வித்யா விகாஸ் பள்ளி மாணவி ஜானகி 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
கரூரில் சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர் எம்.ஜி.பாரதி 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
அரியலூரில் மாண்ட்ஃபோர்டு பள்ளி மாணவர் ஹரிஹரன் 1162 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
பெரம்பலூரில் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் கவின்ராஜ் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் துறையூர் செளடாம்பிகா மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
நாகப்பட்டினத்தில் ராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி தேவ அபிநயா 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பள்ளி முஸ்ரிதா நஸ்ருன் 1177 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தஞ்சையில் பி.ஆர்.பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகெடமி பள்ளி மாணவி சரண்யவதி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிஷ்யா மெட்ரிக் பள்ளி மாணவி கார்த்திகா 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
வேலூர் மாவட்டத்தில் சன் பீம் மெட்ரிக் பள்ளி மாணவி ஹேமத் 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி நித்யா 1191 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாநிலத்தில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் ரஞ்சித் 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
சென்னை மாவட்டத்தில் மாவட்டத்தில் அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி மாணவி என்.ப்ரீதி 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
புதுச்சேரியில் எஸ்.டி.ஏ. பள்ளி மாணவர் சிவ கணேஷ் 1181 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
முடிவுகளை தெரிந்து கொள்ள:
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் விவரங்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
மேற்கண்ட இணையதள முகவரிகளில் www.dge1.tn.nic.in என்ற இணையதளத்தில் ஸ்மார்ட் போன் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதாக அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT