Published : 05 Mar 2015 09:39 AM
Last Updated : 05 Mar 2015 09:39 AM

பாக்கேஜிங் தரத்தை உயர்த்தினால் ஏற்றுமதி வளர்ச்சிபெறும்: வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூடுதல் செயலாளர் பேச்சு

இந்திய பாக்கேஜிங் நிறுவன சென்னை மையம் சார்பில் தொழில் தொடர்பு கூட்டம் மற்றும் புதிய பயிற்சி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடை பெற்றது.

இந்திய பாக்கேஜிங் தொழிற் துறை வளர்ச்சி விகிதம் சர்வ தேச அளவை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. தற்போது இங்கு பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை பாக்கிங் செய்யப் படாமலேயே விற்கப் படுகின்றன. பாக்கிங் செய்யப்பட்ட பொருட் களுக்கு மதிப்பு அதிகம் என்பதால் வரும் காலங்களில் பாக்கேஜிங் தொழிற்துறை பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெறும்.

இந்திய பாக்கேஜிங் நிறுவனத் தின் சென்னை மையம் 1971-ல் தொடங்கப்பட்டது. 1987 முதல் சொந்த கட்டிடத்தில் இயங்கிவரும் இந்த மையமானது பரிசோதனை, தர நிர்ணயம், கல்வி, பயிற்சி, ஆலோசனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை மையம் சார்பில் பெருங்குடியில் புதிய பயிற்சிக் கட்டிடம் கட்டப்படுகிறது. இதற் கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொழில் தொடர்பு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூடுதல் செயலாளர் ரஜனி ராஜன் ராஷ்மி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் போது, “பாக்கேஜிங் தரத்தை உருவாக்குவதன் அவசியத்தை யும், பொறுப்பையும் இந்திய பாக் கேஜிங் நிறுவனம் உயர்ந்துள்ளது.இதனால் ஏற்றுமதி நிச்சயமாக வளர்ச்சி பெறும்” என்றார்.

சோலையில் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரதீப் சோலையில், கால்ஸ் டிஸ்டில்லரி நிறுவன துணைத் தலைவர் இந்துகுமார், இந்திய பாக்கேஜிங் நிறுவன தலைவர் ஆர்விஎஸ் ராமகிருஷ்ணா, இயக்குநர் என்.சி.சாஹா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x