Published : 14 Mar 2015 10:21 AM
Last Updated : 14 Mar 2015 10:21 AM

முறைகேடான கேபிள்கள் துண்டிப்பு: ஒரு வாரத்தில் மாநகராட்சிக்கு ரூ.9.9 கோடி வசூல்

அனுமதி பெறாமல் முறைகேடாக மின் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருக்கும் கேபிள்களை மாநகராட்சி துண்டித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி முதல் இதுவரை 53.09 கி.மீ நீளமுள்ள கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேபிள்களை பயன்படுத்த ஒரு கி.மீ தூரத்துக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ.9,400 வருடாந்திர கட்டணம் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரூ.32,450 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த கட்டணத்தை செலுத்தியவர்கள் அடையாளச் சீட்டுகளை கேபிள்களில் பொருத்தியிருக்க வேண்டும். ஆனால், பல கேபிள்கள் அனுமதி பெறாமலே இருந்தன. அவற்றை துண்டிக்கும் பணியை மாநகராட்சி அனைத்து மண்டலங்களிலும் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி தெரிவித்தபோது, “தேனாம்பேட்டை மண்டலத்தில் 22.7 கி.மீ, ஆலந்தூர் மண்டலத்தில் 12 கி.மீ உட்பட 53.09 கி.மீ. நீளமுள்ள கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கேபிள்கள் துண்டிக்கப்படுகின்றன என்பதை அறிந்து பல நிறுவனங் கள் கட்டணத்தை செலுத்தி வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் ரூ. 9 கோடியே 90 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x