Published : 27 Mar 2015 09:26 AM
Last Updated : 27 Mar 2015 09:26 AM
தமிழக அரசின் கடன் சுமை கடந்த 4 ஆண்டுகளில் ரூ.76,243 கோடி அதிகரித்துள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 2014-15 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.85,772 கோடியாக இருந்தது என்றும், அது வரும் நிதியாண்டில் ரூ.96,083 கோடியாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, பொதுக் கடன் நிலு வைத் தொகை, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, ரூ.2,11,483 கோடியாக அதிகரிக் கும் என்றும் தெரிவித்துள்ளார் (இந்த நிதியாண்டில் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.30,446 கோடி நிகர கடனையும் சேர்த்து). இது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 19.23 சதவீதமாகும்.
ஆனால், 2012-13 நிதியாண்டுக் கான பட்ஜெட்டில், பொதுக் கடன் நிலுவைத் தொகை ரூ.1,35,060.74 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. அதுவே, 2014-15 நிதியாண்டில் சுமார் ரூ.43 ஆயிரம் கோடி அதிகரித்து, ரூ.1,78,170.76 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டது. அது மாநில மொத்த உற்பத்தியில் 18.91 சதவீதமாகும்.
2012-13 நிதியாண்டில் ரூ.1,35,060 கோடியாக மதிப்பிடப் பட்டிருந்த பொதுக் கடன் நிலுவைத் தொகை, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.76,243 கோடி அதிகரித்து, ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், மின் வாரியத்தின் கடன்சுமை (ரூ.80 ஆயிரம் கோடி) கணிசமானதாகும். போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் பல ஆயிரம் கோடி கடன், மாநிலத்தில் வறட்சியால் உற்பத்தி பாதிப்பு, பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் எதிர்பார்த்த அளவு வரி வசூல் ஆகாதது போன்ற காரணங்களால் கடன் சுமை அதிகரித்து வருவ தாக நிதித்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேநேரத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயும் (வணிக வரி, கலால், போக்குவரத்து வரிகள்) தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வரி வருவாய் ரூ.71,640 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. அது, கடந்த நிதியாண்டின் (2014-15) திருத்தப்பட்ட மதிப்பீடு களின்படி, ரூ.83,363 கோடி யாக அதிகரித்தது. வரும் நிதியாண்டில் ரூ.91,835 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வரி வருவாய் ரூ.20 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உயர்ந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT