Published : 18 Mar 2015 09:42 AM
Last Updated : 18 Mar 2015 09:42 AM

தாய், 2 குழந்தைகளை கொன்ற தொழிலாளிக்கு இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள்: கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோவையில் தாய் மற்றும் இரு குழந்தைகள் கொலை செய்யப் பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கோவை, கணபதி அருகே ராம கிருஷ்ணா நகர், ரங்கநாதர் வீதியைச் சேர்ந்தவர் மருத மாணிக்கம். இவரது மனைவி வத்சலாதேவி(28). இவர்களது குழந்தைகள் மகிலன்(6) மற்றும் 11 மாதக் குழந்தை பிரனீத்.

வத்சலாதேவி தனது மாமி யார் கோவிந்தம்மாளுக்குச் சொந்த மான குடியிருப்பில் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் மானாமதுரையைச் சேர்ந்த ஏ.செந்தில்(32) என்பவரும் குடியிருந்து வந்தார். பின்னர், வீட்டை காலி செய்துவிட்டு வேறு பகுதிக்கு சென்ற செந்தில், கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி கோவிந்தம்மாளிடம் அட்வான்ஸ் பணத்தைத் திரும் பப் பெற வந்தபோது, வீட்டில் வத்சலாதேவியும் இரு குழந்தைகள் மட்டும் இருந் ததை கவனித்துள்ளார். வீட்டி னுள் நுழைந்த செந்தில் வத்சலா தேவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது, அதற்கு அவர் உடன்படாததால் அவரையும் குழந்தைகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, வத்சலாதேவியின் 4 பவுன் தாலிச் சங்கிலியையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை யடுத்து, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி சூலூர் பகுதியில் நகையை அடகு வைக்க முயன்றபோது போலீஸார் செந்திலை கைது செய்தனர்.

தண்டனை விவரம்

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தவந்த இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி எம்.பி.சுப் ரமணியன் நேற்று அறிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட செந்தில் மீதான 3 கொலை, திருட்டு, அத்து மீறி நுழைதல் ஆகிய தண்டனைக் குற்றங்கள் சந்தேகத்துக்கு இட மின்றி நிரூபணம் ஆனதால், வீட்டினுள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம்; வத்சலாதேவியை கொலை செய்த குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம்; அவரிடம் இருந்த நகையைத் திருடிச் சென்ற குற்றத்துக்காக 7 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும் மற்றும் ரூ. 1,000 அபராதமும் விதித்தார்.

மேலும் இரு குழந்தைகளை கொலை செய்த குற்றத்துக்காக இரண்டு தூக்கு தண்டனையும், தலா 1,000 வீதம் அபராதமும் விதித்ததுடன், இந்தத் தண்ட னைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x