Published : 21 May 2014 10:43 AM
Last Updated : 21 May 2014 10:43 AM
பயணிகள் நிழற்குடை மீது ஆலமரம் சாய்ந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மழைக்காக ஒதுங்கிய தந்தை, மகன் உள்ளிட்ட 5 தொழிலாளர்களுக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணன் தேவன் பட்டியில் தனியார் திராட் சைத் தோட்டம் உள்ளது. இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வீட்டுக்குப் புறப் பட்டனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் ஒரு டிராக் டரில் சென்ற நாராயணன் தேவன்பட்டியைச் சேர்ந்த சிங்கத் தேவர் (40), சுருளிபட்டியைச் சேர்ந்த குணசேகரன் (42), குன்னப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (38), திருப் பாண்டி (58), அவரது மகன் ரமேஷ் (32) ஆகியோர் வழியிலேயே டிராக்டரில் இருந்து இறங்கி, ஒரு பயணிகள் நிழற்குடைக்குள் தஞ்சம் புகுந்தனர்.
அப்போது அருகில் உள்ள 300 ஆண்டுகால பழமையான ஆலமரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. மேலும், காற்று வேகமாக அடித்ததால் அந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து அருகிலிருந்த பயணிகள் நிழற்குடை மீது விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி சிங்கத்தேவர், குணசேகரன், மணிகண்டன், திருப்பாண்டி, ரமேஷ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறை, தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து மரக்கிளைகளை வெட்டி இறந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் கனமழை பெய்ததால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் 5 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT