Published : 10 Mar 2015 09:52 AM
Last Updated : 10 Mar 2015 09:52 AM
தனியார் ஆய்வகங்களில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 12 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலி யாகியுள்ளனர். 375 பேருக்கு இந்நோய் பாதிப்பு கண்டறியப்பட் டுள்ளது. பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக பரி சோதனை செய்துகொள்ள வேண் டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
பொதுமக்களின் வசதிக்காக பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக் காக அரசு சார்பில் 7 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 13 தனியார் ஆய்வகங்களில் மட்டும் இந்தப் பரிசோதனை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலை யில், தனியார் ஆய்வகங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படு வதாக புகார்கள் கூறப்பட்டன. அதைத் தொடர்ந்து 13 ஆய்வகங் களிலும் சுகாதாரத்துறை அதிகாரி கள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
பன்றிக் காய்ச்சல் பரிசோத னைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3,750 மட்டுமே கட்டணமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வ கங்கள், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும். அரசு பரிசோதனைக் கூடங்களில் கட்டணம் கிடையாது.
தனியார் ஆய்வகங்களில் ரூ.8 ஆயிரம் வரை வசூலித்ததாக புகார் கள் வந்ததால் ஆய்வு நடத்தி வருகிறோம். பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் அந்த ஆய்வகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT