Last Updated : 23 Mar, 2015 08:42 AM

 

Published : 23 Mar 2015 08:42 AM
Last Updated : 23 Mar 2015 08:42 AM

வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்த விவகாரம்: ஓசூர் கல்வி அதிகாரி உள்பட 2 பேர் மீது நடவடிக்கை?- தேர்வு கண்காணிப்பு பணியில் வட்டாட்சியர்கள்

ஓசூரில் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்த விவ காரத்தில், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

கடந்த 18-ம் தேதி நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வின்போது ஓசூர் தனியார் பள்ளி ஆசிரி யர்கள் வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்த விவ காரம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அலு வலகப் பணியாளர் ஒருவர் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து கல்வித்துறையைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:

கடந்த 18-ம் தேதி ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளியில் நடந்த கணிதத் தேர்வின்போது, கண் காணிப்பாளர்களாக பணியாற்றிய விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரி யர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் செல்போன் மூலம் வினாத்தாளில் உள்ள ஒரு மதிப் பெண் மற்றும் 6 மதிப்பெண் வினாக்களை படம் பிடித்து சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவி உள்ளனர். அப்போது பள்ளிக்கு வந்த அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தலைமை யிலான சிறப்பு பறக்கும் படையினர், சம்பந்தபட்ட ஆசிரியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து விஜய் வித்யாலயா பள்ளிக்குச் சென்ற சிஇஓ பொன். குமார், தேர்வு முடியும் வரை அனைத்து அறைகளிலும் தீவிர மாக கண்காணித்துள்ளார். மேலும், மகேந்திரன், கோவிந்தன் ஆகிய இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் எவ்வித உத்தரவும் இல் லாமல் அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், பரிமளம் மெட்ரிக் பள்ளிக்கு டிஇஓ அலு வலகத்திலிருந்து போன் மூலம் வந்த உத்தரவை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் அவர்கள் ஈடுபட அனுமதித்ததும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான புகாரின்பேரில் ஆசிரியர் மகேந் திரன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜிடம் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். ஏற்கெனவே இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு உதவும் நோக்கில் செயல்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கணிதத் தேர்வு நடக்கும்போது, கணித ஆசிரி யர்களை தேர்வு மையக் கண் காணிப்பாளராக நியமிக்கக் கூடாது. அப்படி இருந்தும், தனியார் பள்ளி கணித ஆசிரியர் மகேந்திரன், தேர்வு மைய கண்காணிப்பாளராக எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களை கண் காணிப்பாளர்களாக தான் நியமிக்க வில்லை என்றும் அவர் அறிக்கை அளித்ததாகத் தெரிகிறது. அப்படி யென்றால் தொலைபேசி மூலம் உத்தரவிட்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவரை கண் காணிப்பு பணிக்கு அனுப்பியது யார் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் மற்றும் டிஇஓ அலுவலகத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மீது கல்வித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுக்கிறது. இதனால் இருவரிடமும் அதிகாரிகள் ரகசியமாக விசாரித்து வரு கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கண்காணிப்பு பணியில் மாற்றம்

வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் பகிர்வு சம்பவத்தைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள் ளது. அதன்படி தொடர்ந்து நடை பெறவுள்ள பிளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு களைக் கண்காணிக்கும் பணியில் அனைத்து வட்டாட்சியர்களையும் ஈடுபடுத்த உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு நியமிக்கப் பட்டுள்ள பறக்கும்படை அலுவ லர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்திலிருந்தும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

தருமபுரியிலும் நடவடிக்கை

வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளி உட்பட 3 பள்ளிகளிலிருந்து 93 கண்காணிப்பாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இப்பள்ளிக் குழுமத்துக்கு தருமபுரியில் 2 பள்ளிகள் உள்ளன.

அந்தப் பள்ளிகளின் தேர்வு மையத்திலிருந்து 38 பேரும், முதன்மை கண்காணிப்பாளர்கள் 2 பேரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பள்ளிகளில் ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 2 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தருமபுரி சிஇஓ மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிக்கு செல்ல ஆர்வம்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தனியார் பள்ளிகளில் கண்காணிப்புப் பணிக்கு செல்ல ஆர்வம் காட்டுவதாகவும், இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ள சிலரது ஆதரவுடன் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்கு பணி யாற்ற உத்தரவு பெறும் சம்பவங்களும் நடந்திருப்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகள் பெரும் தொகையை கைமாற்றுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார் பள்ளி தேர்வு மையத்துக்கு கண்காணிப்பு பணிக்கு செல்ல போட்டிகள் நிலவும் என கல்வி அலுவலர்கள் சிலர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x