Published : 04 Mar 2015 08:36 AM
Last Updated : 04 Mar 2015 08:36 AM

பன்றிக்காய்ச்சலை தடுக்க கபசுர மூலிகைக் குடிநீர்: சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அபூர்வ தகவல்

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் கூடிய மருந்து சித்த மருத்துவத்தில் உள்ளது. அதற்கு `கபசுர’ குடிநீர் என்று பெயர்’ என பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் தெரிவித்தனர்.

அக்கல்லூரி மாணவர்கள் பி.கே.ரமேஷ், ஆர். கனியமுதன், ஜானகிராம் ஆகியோர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

உலகில் தோன்றிய, தோன்றக் கூடிய அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவம் தீர்வு சொல்கிறது. தற்போது பரவிக்கொண்டிருக்கும் பல்வேறுவித காய்ச்சல்களுக்கு எளிய தீர்வு சித்த மருத்துவத்தில் உள்ளது. சித்த மருத்துவத்தில் 64 வகையாக சுரம் பிரிக்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் குறிப்பிடப்படும் சிக்குன் குன்யா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவற்றுக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தீர்வுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவியபோது நிலவேம்பு குடிநீர் மக்களுக்கு பாதுகாப்பு அளித்தது.

தற்போது வடமாநிலங்களில் பரவலாக பரவிவரும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள், சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள கபசுரத்தின் அறிகுறிகளை ஒத்து உள்ளன. இடைவிடாத சுரம், மெய் குளிரல், உடல் வெதும்பல், இருமல், மார்பு நோதல், மேல் மூச்சு, மூச்சுத் திணறல், உடல் வலி, மிக்கபேதி, இருகண்களிலும் பீளை சேருதல், மனம் துவளல், தொண்டை நோதல், முகம், கை, கால் இவை வெளுத்தல், நாக்கு சுவையறியாமை ஆகியவை பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள்.

பன்றிக் காய்ச்சலான கபசுரத்தின் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் கபசுர குடிநீரை நாமே தயாரிக்கலாம். இச்சூரணத்தில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், நெல்லிவேர், கற்பூரவல்லி, நிலவேம்பு, சிறுதேக்கு, ஆடாதொடை, சிறுகாஞ்சொறிவேர், வட்டதிருப்பி வேர், சீந்தில் தண்டு, கடுக்காய்தோல், கோஷ்டம், கோரைக்கிழங்கு, அக்கரகாரம் ஆகிய 15 வகையான மூலிகை பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை பொடிசெய்து சமஅளவு சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீரை தயாரித்து மக்களுக்கு வழங் கியதுபோல், தமிழக அரசும், மத்திய அரசும் மக்கள் நலன் கருதி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் தவும், ஆரம்ப சுகாதார நிலையங் களிலும், அரசு மருத்துவமனை களிலும் கபசுர குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது கபசுர குடிநீர் தயாரிக்க தேவையான மூலிகைகள் அடங்கிய பாக்கெட்டுகளை தனியார் விற்பனை செய்கிறார்கள். இதை தமிழக அரசின் மூலிகை பண்ணை மற்றும் மருந்து கழகம் சார்பில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இது குறித்து சித்த மருத்துவ மாணவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பன்றி காய்ச்சலை குணப்படுத்தும் கபசுர மூலிகைக் குடிநீர் தயாரிப்பு குறித்து விளக்கும் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x