Published : 19 Mar 2015 10:15 AM
Last Updated : 19 Mar 2015 10:15 AM

ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: 8 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்கப்பட்டு மார்ச் 31-க்குள் அரசாணை வெளியிட உடன்பாடு எட்டப்பட்டதால் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப் படுகிறது என மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று மார்ச் 18 முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இதற் கான ஆயத்த மாநாடு மார்ச் 7-ம் தேதி மதுரையில் நடைபெற்றது. தொடர்ந்து பிரச்சார கூட்டங்களை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் மதுரையில் நேற்று கூறியதாவது: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செயலர் ககன்தீப்சிங் பேடி, இயக்குநர் பாஸ்கரன் ஆகியோர் அரசு தரப்பில் பேச்சு நடத்தினர். சங்க பொதுச் செயலர் சேகர் தலைமையில் போராட்டக் குழுவினர் கோரிக்கை களை முன்வைத்து பேசினர். இதில் 8 கோரிக்கைள் அரசு தரப் பில் ஏற்கப்பட்டன. இதற்கு இம்மாதம் 31-க்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என எழுத்து மூலமாக உறுதியளிக்கப் பட்டுள்ளது. இதர கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று தொடங்குவதாக இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது என்றார்.

ஏற்கப்பட்ட கோரிக்கைகள்

ஊராட்சி செயலர்களுக்கு ஊதிய உயர்வு, கருணை அடிப் படையில் பணி, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குதல். மாவட்ட, வட்டார முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்குதல், கணினி உதவியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குதல், நேரடி உதவியாளர்களுக்கு பணி விதிகள், இயக்குநர் அலுவலகத்தில் 18 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை வட்ட வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்துதல், பதிவறை எழுத்தர்களுக்கு 5:1 என்ற நிலையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

நிலை 1, நிலை 2 என்ற நிலையில் பணியாற்றும் சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது, ஓவர்சீயர்களுக்கு இளநிலை பொறியாளர்களாக பதவி உயர்வு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி உயர்வுக் கான 2014-15-க்கு பட்டியல் வெளியிடுதல் உள்ளிட்ட கோரிக் கைகள் ஏற்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x