Published : 20 Feb 2014 12:00 AM
Last Updated : 20 Feb 2014 12:00 AM
தமிழக பாஜக மீனவரணி சார்பில் சென்னையில் நடமாடும் ‘நமோ’ மீன் கடைகள் திறக்கப்படுகின்றன. முதல் கடையை 25-ம் தேதி கலங்கரை விளக்கம் பகுதியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தொடங்கி வைக்கிறார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை டீ வியாபாரி என காங்கிரஸார் விமர்சித்தனர். அதையே பாஜகவினர் தங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்தத் தொடங்கிவிட்டனர்.
பல ஊர்களில் ‘நமோ’ (நரேந்திர மோடி) டீ ஸ்டால்களை திறந்துள் ளனர். மோடி பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ‘நமோ’ டீ கடைகளை திறந்து இலவசமாக டீ வழங்குகின்றனர்.
அடுத்தகட்டமாக, மோடி பெயரில் சென்னையில் நடமாடும் மலிவு விலை மீன் கடைகளை திறக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது தமிழக பாஜக மீனவரணி. இதற்கு ‘நடமாடும் நமோ மீன் கடை’என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தமிழக பாஜக மீனவரணித் தலைவர் சதீஷ்குமார் கூறியதாவது:
எந்த நேரத்தில் காங்கிரஸ்காரர் கள் நரேந்திர மோடியை டீக்கடைக் காரர் என்று கிண்டல் செய்தார் களோ தெரியவில்லை.
அது நல்ல முகூர்த்த நேர மாகி, நாடு முழுவதும் இப்போது ‘நமோ’ டீ கடைகள் பிரபலமாகி வருகின்றன. இதற்கு மக்களிடத் தில் நல்ல வரவேற்பும் உள்ளது.
சென்னையில் மீன் விலை யைக் கேட்டால் தலை தெறிக் கிறது. ஸ்லைஸ் செய்யப்பட்ட வஞ்சிரம் மீன், அரசு மீன் அங் காடிகளில் கிலோ 950 ரூபாய்க்கு விற்கிறார்கள். நாங்கள் அதை 750 ரூபாய்க்கு கொடுக்கத் தீர் மானித்திருக்கிறோம்.
இதிலேயே எங்களுக்கு கிலோவுக்கு 25 ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த மலிவுவிலை மீன் கடைக்கு ‘நடமாடும் நமோ மீன் கடை’ என பெயர் வைத்துள்ளோம்.
மத்தியில் பாஜக அரசு அமைந் தால் விலைவாசி குறையும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத் தத்தான் இந்த ‘நடமாடும் நமோ மீன் கடை’களை திறக்கிறோம். நிரந்தர கடைகளை திறக்க இடம் கிடைக்கவில்லை. அத னால், நடமாடும் மீன் கடையை திறக்கிறோம்.
முதல் கடையை கலங்கரை விளக்கம் ஏரியாவில் வரும் 25-ம் தேதி பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் திறந்துவைக் கிறார். முதல் நாளன்று ‘நமோ மீன் கடை’யில் 200 பேருக்கு இலவசமாகவே மீன்களை கொடுக் கிறோம். அடுத்த 15 நாளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தலா ஒரு கடையைத் திறக்கத் தீர்மானித் திருக்கிறோம்.
மக்களிடம் இருக்கும் வரவேற்பைப் பொறுத்து அனைத்து மாவட்டங்களிலும் ’நமோ நடமாடும் மீன் கடைகள்’திறப்போம். இந்தக் கடைகளின் போர்டுகளில் நரேந்திர மோடி படம் இருக்கும். அடுத்தகட் டமா, மீன்களை டோர் டெலிவரி செய் யும் திட்டத்தையும் வைத்திருக்கி றோம். எங்கள் நிர்வாகிகள் தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டுத் தான் இந்தக் கடையை தொடங்கு கிறோம்.
வெளியிலிருந்து பார்த்தால் இது மீன் வியாபாரம் போல் தெரி யும். ஆனால், ’நமோ மீன் கடைகள்’ மூலம் மோடியின் பெயரையும் புகழையும் தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க இந்தக் கடை களை நாங்கள் ஒரு பிரச்சார மேடையாகப் பயன்படுத்தப் போகி றோம்.
இவ்வாறு சதீஷ்குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT