Published : 24 Mar 2015 07:43 AM
Last Updated : 24 Mar 2015 07:43 AM
வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வு நடந்து வருகிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கணிதத் தேர்வு வினாத்தாளை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில் கடந்த 18-ம் தேதி நடந்த கணிதத் தேர்வுக்கு அறைக் கண்காணிப்பாளராக சென்ற விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகி யோர் செல்போன் மூலம் வினாத் தாளை படம் எடுத்து, சக ஆசிரியர் களான உதயகுமார், கார்த்தி கேயன் ஆகியோருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர்.
அப்போது பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த சிறப்பு பறக்கும் படை கண்காணிப்பாளரான முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் இதை கண்டுபிடித்தார். இதுதொடர்பான புகாரின்பேரில் ஆசிரியர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்விவகாரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. மேலும், ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் உள்ளிட்ட சில ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவி புரிந்ததாக புகார்கள் கூறப்பட்டன.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன், தமிழ்நாடு பாடநூல் மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரி வந்தனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் ராஜேஷுடன் ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 ஆசிரியர் களிடம் போலீஸார் விசாரணை நடத்திய பிறகு, கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்தில் ஓசூர் டிஇஓ வேதகண் தன்ராஜ் மற்றும் கிருஷ் ணகிரி கல்வி மாவட்ட அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகரன், புக்காசாகரம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது, இளநிலை உதவியாளர் ரமணா, சிஇஓ அலுவலக உதவியாளர் அசோக் குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ஒதுக்கீடு, குலுக்கல் முறையில் நடந்துள்ளது. ஆனால் ஓசூர் கல்வி மாவட்டத்தில் இது பின்பற்றப்படவில்லை. இனி வருங்காலங்களில் அனைத் துத் தேர்வு மையங்களிலும் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறுதேர்வு நடத்தப்படுமா?
சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் களுக்கு மறு தேர்வு நடத்தப் படுமா எனக் கேட்டதற்கு, “பகிர்ந்த வினாத்தாள் மூலம் மாணவர் களுக்கு விடைகள் அளிக்கப்பட வில்லை. எனவே மறு தேர்வு நடத்தப்படமாட்டாது” என்றார்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை, தேர்வு மையம் அங்கீ காரம் ரத்து உள்ளிட்ட பல கேள்வி களுக்கு, “போலீஸ் விசார ணைக்கு பிறகு, தொடர்பு உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT