Published : 11 Mar 2015 09:36 AM
Last Updated : 11 Mar 2015 09:36 AM

உலகளாவிய சிற்பக் கலை நகரமாக மாமல்லபுரம் தேர்வாகுமா? - யுனெஸ்கோ குழுவினர் நாளை ஆய்வு : ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயங்குவதாக புகார்

மாமல்லபுரம் நகரை, உலகளாவிய சிற்பக் கலை நகர மாக தேர்வு செய்வது குறித்து யுனெஸ்கோ அமைப்பினர் நாளை ஆய்வு மேற்கொள்ள உள் ளனர். இதையடுத்து, பாரம்பரிய சின்னங்கள் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோட் டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பேரூராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

யுனெஸ்கோ அமைப்பு உலக ளாவிய சிற்பக் கலைகள் மிகுந்த நகரை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்காக, இந்தியா, சீனா, வங்கதேசம், குவைத் ஆகிய 4 நாடுகளில் சிற்பங்கள் அமைந்துள்ள நகரங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டில் கடற்கரை கோயில் மற்றும் குடைவரை கோயில்கள் அமைந்துள்ள மாமல்லபுரம் நகரமும் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இதற்காக தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம் பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் சந்தோஷ் பாபு ஒருங்கி ணைப்பில், யுனெஸ்கோ அமைப் பின் குழுவினர் நாளை மாமல்லபுரம் பகுதியில் உள்ள சிற்பங்கள் மற்றும் நகரப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்த உள்ளனர். இதற்கான முன்னேற்பாடாக, செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், மாமல்லபுரம் பகுதியில் உள்ள கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் மற்றும் குடை வரை கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் தொல்லியல் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.

இதில், அர்ஜூனன் தபசு சிற்பத்தின் நேரே உள்ள சாலையில், ஏராளமான கடைகள் சாலையை ஆக்கிரமித்து அமைக் கப்பட்டிருப்பது தெரிந்தது. கடற்கரை கோயில், ஐந்து ரதம், குடைவரை கோயில் பகுதி களில், தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள நிலங்களையும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. இதனால், மேற் கூறிய பகுதிகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்று மாறு பேரூராட்சி மற்றும் தொல்லியல் துறைக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள் ளார். மாமல்லபுரம் நகரப் பகுதியில் கோட்டாட்சியர் இன் றும் வருவாய்த் துறை அதிகாரி களுடன் ஆய்வு செய்ய உள்ளார்.

இதுகுறித்து, மாமல்லபுரம் பகுதிவாசிகள் கூறியதாவது: அரசியல் பிரமுகர்களின் ஆதர வோடு இந்த ஆக்கிரமிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. அவற்றை அகற்றுமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டும், உள்ளூர் அதி காரிகள் மெத்தனமாக செயல் படுகின்றனர். இதனால், யுனெஸ்கோ அமைப்பினர் நகரின் நிலையை கண்டு முகம் சுளிக்க வாய்ப்புள்ளது. உயர்அதிகாரிகள் நேரில் வந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித் தனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் கூறியதாவது: மாமல்லபுரம் பகுதி யில் இன்றும் நான் ஆய்வு மேற் கொள்ள உள்ளதால், அகற்றப் படாத ஆக்கிரமிப்புகளை வரு வாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று அகற்றுவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x