Published : 12 Mar 2015 10:04 AM
Last Updated : 12 Mar 2015 10:04 AM

எழுத்துப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்: சாகித்ய அகாடமி விருது பெற்ற சா. தேவதாஸ் நெகிழ்ச்சி

எனது எழுத்துப் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக சாகித்ய அகாடமி விருதை கருதுகிறேன் என எழுத்தாளர் சா. தேவதாஸ் (61)மகிழ்ச்சி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையம் அருகேயுள்ள நடைய னேரியைச் சேர்ந்த எழுத்தாளர் சா.தேவதாஸுக்கு 2014-ம் ஆண் டுக்கான சிறந்த மொழிபெயர்ப் புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையில் பணியில் சேர்ந்து, 2012-ல் புதுக்கோட்டையில் துணைப் பதிவாளராக பணியில் இருந்த போது ஓய்வுபெற்றார்.

இவர் இதுவரை 25 நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 6 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

பபானி பட்டாச்சார்யா எழுதிய ‘ஷேடோ ஓவர் லடாக்’ என்ற ஆங்கில நாவலை ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்’ என்ற பெயரில் தமிழில் தேவதாஸ் மொழி பெயர்த்துள்ளார்.

இந்த நாவலானது இந்தியா- சீனா போர் குறித்தும், காந்திய பொருளாதாரத்துக்கும், நவீன பொருளாதாரத்துக்கும் இடையிலான முரண்பாடுகளை மனிதர்களின் காதல் உணர்வின் வழியாக நுட்பமாக விவரிக்கிறது.

2014-ம் ஆண்டுக்கான சிறந்த மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் சா. தேவதாஸ் மொழியெர்த்த ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்’ என்ற நூல் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் புதுடெல்லியில் நடைபெறும் விழாவில், தாமிர பட்டயம், சால்வை, ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை இவருக்கு வழங்கப்படும்.

இதுகுறித்து, எழுத்தாளர் சா. தேவதாஸ் கூறியதாவது: சாகித்ய அகாடமி விருது அறி விக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. எழுத்திலும், வாசிப் பிலும், மொழி பெயர்ப்பிலும் எனக் கிருந்த ஆர்வமும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கமும்தான் விருதுபெற முக்கியக் காரணம்.

இந்த விருதை எனக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். அடுத்ததாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் பியூன்திஸ் என்பவரது படைப்பை, தமிழில் மொழியாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x