Published : 24 Mar 2015 08:24 AM
Last Updated : 24 Mar 2015 08:24 AM
சென்னை மாநகராட்சியில் 2015-16-ம் ஆண்டுக்கு ரூ.4,447 கோடிக்கு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மன்ற அரங்கினுள் காலை 9.30 மணிக்கு நுழைந்த மேயர், திருக்குறள் படித்து மன்ற நிகழ் வுகளை முறைப்படி தொடங்கி வைத்தார். பின்னர் காலை 9.32 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து, படிக்கத் தொடங்கினார். 10.40 மணிக்கு முடிந்தார். அதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 வரை பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.
2015-16 நிதியாண் டில் சொத்து வரி வருவாய் ரூ.600 கோடியாக வும், தொழில் வரி வருவாய் ரூ.250 கோடியாகவும், முத்திரைத் தாள் மீதான கூடுதல் வரி வருவாய் ரூ.200 கோடியாகவும், கேளிக்கை வரி வருவாய் ரூ.25 கோடியாகவும், மாநில நிதிக்குழு மானியம் ரூ.600 கோடியாகவும், இதர வருவாய் ரூ.716 கோடியே 46 லட்சமாக வும் இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
அதே வேளையில் பணியாளர் ஊதிய செலவு ரூ.832 கோடியே 67 லட்சமாகவும், ஓய்வூதிய செலவு ரூ.282 கோடி யாகவும் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. நிர்வாகச் செலவுக்கு ரூ.118 கோடியே 32 லட்சமும், பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு செலவுக்கு ரூ.630 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து வழித்தட சாலைகள், உட்புற தார் சாலைகள் மேம் பாட்டுக்காகவும், சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்க வும் ரூ.1,232 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் வாய்கள் அமைக்க ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தெருவிளக்கு கம்பங்கள், எல்இடி விளக்குகள் அமைப் பதற்கு ரூ.150 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. துப்புரவுப் பணிகளுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆய்வு வாகனங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு தேவையான லாரிகள் மற்றும் கனரக டிப்பர் வாகனங்களை கொள்முதல் செய்ய ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் கட்ட ரூ.122 கோடி யும், சிறப்பு திட்டங்களுக்காக ரூ.90 கோடியும், கல்வித் துறைக்கு ரூ.7 கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.5.50 கோடியும், குடும்பநலத் திட்டங் களுக்காக ரூ.2கோடியும், பாலங் கள் அமைக்க ரூ.42 கோடியும், பூங்காமற்றும் விளையாட்டுத் திடல் அமைக்க ரூ.90 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மன்றத்தில் அறிவிக்கப்பட்ட பணிகளில் 52 சதவீதம் நிறைவு
ெசன்னை மாநகராட்சியில், தான் மேயராக பொறுப்பேற்று அறிவிக்கப்பட்ட பணிகளில் 3 ஆண்டுகளில் 52 சதவீத பணிகள் நிறைவடைந்திருப்பதாக பட்ஜெட் உரையில் மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
புதிய சென்னையை படைக்கஇதுவரை 419 பணிகள் அறிவிக் கப்பட்டுள்ளன. இவற்றில் 3 ஆண்டுகளில் 218 அறிவிப்புகள் (52 சதவீதம்) நிறைவேற்றப்பட்டுள்ளன. 165 (39 சதவீதம்) அறிவிப்புகள் முன்னேற்றம் கண்டு, செயலாக்கம் பெற்று வருகின்றன. 2015-16 நிதியாண்டில் இத்திட்டங்கள் நிறைவு பெற்றால், முடித்த பணிகளின் சதவீதம் 91 ஆக உயரும். இத்திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ள தொகை ரூ.18 ஆயிரத்து 222 கோடியே 37 லட்சம் ஆகும்.
1996 முதல் 2001 வரை சென்னை மாநகராட்சி மேயராக இருந்த ஸ்டாலின், பட்ஜெட்டில் 159 அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டார். அதில் 60 அறிவிப்புகள் (37 சதவீதம்) மட்டுமே முடிக்கப்பட்டன. 2006 முதல் 2011 வரை திமுக மேயர் அறிவித்த 606 அறிவிப்புகளில் 253 அறிவிப்பு கள் (41 சதவீதம்) மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. அந்த 5 ஆண்டு களில் ரூ.11 ஆயிரத்து 178 கோடியே 95 லட்சம் மட்டுமே திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளன.
1 லட்சத்து 77 ஆயிரத்து 801 மனுக்கள் பெறப்பட்டு, 1 லட்சத்து 73 ஆயிரத்து 970 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. 831 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்த ஆட்சியில் இதுவரை 207 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 16 ஆயிரத்து 57 சாலைகள் போடப்பட்டுள்ளன. கொசு பெருக்கத்தை இயற்கையாக கட்டுப்படுத்த 5 லட்சம் நொச்சிச் செடிகள் வழங்கப்பட்டுள்ளன. 300 பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு 146 பூங்காக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சாலைகள் அமைக்க ரூ. 1,232 கோடி ஒதுக்கீடு: 5,222 உட்புற சாலைகள் அமைக்க தீர்மானம்
சென்னை மாநகராட்சி 2015-16-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சாலைகள் அமைக்க ரூ.1,232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து வழித் தடங்களின் மேம்பாடு, பேருந்து சாலைப் பணிகள், உட்புற தார் சாலைகள் மேம்பாடு, சிமென்ட் கான்கிரீட் சாலைகள் மேம்பாடு மற்றும் அந்தந்த மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் சாலை தொடர்பான இதரப் பணிகளுக்காக ரூ.1,232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மன்ற கூட்டத்தில் ரூ.705 கோடி செலவில் 843 கி.மீ. நீளத்தில் 5,222 உட்புற சாலைகளை அமைப்பதற்கான தீர்மானமும், ரூ.437 கோடியில் 197 பேருந்து சாலைகள் அமைப்பதற்கான தீர்மானமும் நிறை வேற்றப்பட்டன. உட்புற சாலைகள் அமைக்கும் திட்டத் தின் கீழ் ரூ.476 கோடி செலவில் 611 கி.மீ. நீளத்தில் 3,232 தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. ரூ.229 கோடி செலவில் 231 கி.மீ. நீளத்தில் 1,990 சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதுவரை 419 திட்டங்கள் அறிவிப்பு
சைதை துரைசாமி மேயராக பொறுப்பேற் றதில் இருந்து 3 முறை தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில் மொத்தம் 419 திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 218 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 165 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 36 திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 52 சதவீதம் நிறைவடைந் துள்ளன. 39 சதவீத திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக மேயர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மழைநீர் வடிகால் அமைக்க ரூ.350 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க 2015-16 மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் போதிய மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் மழைக் காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு 2015-16 மாநகராட்சி பட்ஜெட்டில் ஜவஹர்லால் நேரு தேசிய ஊரக நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்காக ரூ.30 கோடி, உலக வங்கி நிதியுதவியுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களை அமைக்கும் பணிகளுக்கு ரூ.300 கோடி, இதர பணிகளுக்காக ரூ.20 கோடி என மொத்தம் ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு கடந்த 2014-15 நிதியாண் டில் திருத்திய மதிப்பீட் டில் ரூ.175 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT