Published : 26 Mar 2015 10:20 AM
Last Updated : 26 Mar 2015 10:20 AM

தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

சட்டப்பேரவையில் முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2015-16-ன் சிறப்பு அம்சங்கள்:

* ரூ.75 கோடியில் மலைப்பகுதிகளில் சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டம்.

* அனைத்துப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்புத் திட்டம்.

* காவல்துறைக்கு ரூ.5,568.81 கோடி ஒதுக்கீடு.

* நீதித்துறைக்கு ரூ.809.70 கோடி.

* சாலை பாதுகாப்பு நிதிக்கு ரூ.165 கோடி.

* தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.46.77 கோடி.

* உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.662.36 கோடி உட்பட வருவாய்த்துறைக்கு ரூ.6,126 கோடி.

* வேளாண் துறைக்கு ரூ.6,613.68 கோடி ஒதுக்கீடு.

* ரூ.200 கோடி மதிப்பீட்டில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம்.

* விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க ரூ.25 கோடியில் தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை.

* நெல்லை, திருச்சியில் வாழைக்கும், கிருஷ்ணகிரி, தேனியில் மாம்பழத்துக்கும், தருமபுரி, கிருஷ்ணகிரியில் தக்காளிக்கும் திண்டுக்கல், திருச்சியில் வெங்காயத் துக்கும், ராமநாதபுரம், தூத்துக்குடியில் மிளகாய்க்கும் ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் குளிர்சாதன சேமிப்பு கட்டமைப்பு வசதி.

* 25 கால்நடை கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும்.

* பால்வளத்துறைக்கு ரூ.100.68 கோடி.

* மீனவர் நிவாரண திட்டத்துக்கு ரூ.183 கோடி ஒதுக்கீடு.

* மீன்வளத்துறைக்கு ரூ.728.68 கோடி.

* காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க சட்ட ரீதியான முயற்சி.

* காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்கு குழு அமைக்க தொடர் நடவடிக்கை.

* நதிநீர் இணைப்பு பணிகளுக்கு ரூ.253.50 கோடி.

* காவிரி வடிநில பருவநிலை மாற்றத்தழுவல் திட்டத்துக்கு ரூ.200 கோடி.

* நீர்ப்பாசன துறைக்கு ரூ.3,727.37 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு பல்லுயிரின பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டத்துக்கு ரூ.122.68 கோடி.

* ரூ.53.72 கோடி செலவில் 67 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

* மாதவரம், அம்பத்தூர், கொரட்டூர் ஏரிகளில் ரூ.50 கோடி செலவில் மறுசீரமைப்புப் பணிகள்.

* மின்சாரத் துறைக்கு ரூ.13,586 கோடி.

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.8,228.24 கோடி ஒதுக்கீடு.

* உள்ளாட்சி சாலைகள், மாவட்ட சாலைகளின் தரத்துக்கு உயர்த்தப்படும்.

* 427 கிலோ மீட்டர் சாலைகள் ரூ.2,414 கோடி செலவில் இருவழித்தட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

* தொழில் உரிமங்கள் மற்றும் ஒப்புதல்களுக்கு விண்ணப்பிப்பதை எளிமைப்படுத்த ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம்.

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.365.91 கோடி.

* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,422 கோடி.

* நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,926.32 கோடி.

* ரூ.750 கோடி செலவில் 8,268 குக்கிராமங்களில் மேம் பாட்டுத் திட்டம்.

* ஊரக உள்ளாட்சி அமைப்பு சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி.

* சென்னை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ.500 கோடி.

* ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

* 12 மாநகராட்சிகளையும் திறன்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் சேர்க்க ரூ.400 கோடி.

* மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.8,245.41 கோடி.

* பள்ளி மாணவர் நலத்திட்டங்களுக்கு ரூ.1,037.85 கோடி.

* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி. உயர் கல்விக்கு ரூ.3,696.82 கோடி.

* சத்துணவு திட்டத்துக்கு ரூ.1,470.53 கோடி.

* 12,609 அங்கன்வாடிமையங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு.

* இலவச லேப்-டாப் திட்டத்துக்கு ரூ.1,100 கோடி.

* ஆதி திராவிடர் துணை திட்டத்துக்கு ரூ.11,274.16 கோடி.

* பழங்குடியினர் துணை திட்டத்துக்கு ரூ.657.75 கோடி.

* இலங்கைத் தமிழர் நலனுக்கு ரூ.108.46 கோடி.

* ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்களுக்கு ரூ.18,668 கோடி ஒதுக்கீடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x