Published : 21 Mar 2015 09:32 AM
Last Updated : 21 Mar 2015 09:32 AM

பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் ஆய்வுக்கு கேரள அரசு அதிகாரி நியமனம்

பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வுப் பணிக்கு அம்மாநில நீர்பாசனத் துறை தலை மைப் பொறியாளரை நியமித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை பலம் இழந்துள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால், கேரளத் தில் 6 மாவட்ட மக்கள் பாதிக்கப் படுவார்கள் எனக் கூறி அம்மாநில அரசு பல்வேறு இடையூறுகளை செய்தது. ஆனால், தமிழக அரசு சட்டரீதியாகப் போராடி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி அணையில் 142 அடிக்கு நீரை தேக்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான புல்தகிடி அருகே ஆனவச்சால் என்ற இடத்தில், அம்மாநில வனத் துறை வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இரு மாநில அரசுகளும் சம்பந்தப்பட்ட இடத்தை சர்வே செய்ய உத்தரவிட்டது. இதனால் 15 பேர் கொண்ட குழு வினர் சர்வே பணியை தொடங்கி இரண்டு வாரத்தில் முடித்து, பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில், பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதைப் பயன்படுத்தி, அணைப் பகுதியில் மண், பாறை, புவியியல், நிலநடுக்கம், வனவிலங்கு பாதுகாப்பு உட்பட 13 ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஆய்வுப் பணிக்கு ‘ஆழ் துளை ஆய்வு’ என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்த ஆய்வை, திருச் சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொறியியல் ஆய்வு மையம் மேற்கொள்ள உள்ளது.

இதற்காக, அம்மாநில நீர்பாச னத் துறை தலைமைப் பொறி யாளர் ஜார்ஜை நேற்று முன்தினம் நியமித்து கேரள அரசு உத்தர விட்டுள்ளது. அடுத்த வாரம் ஜார்ஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆய் வுப் பணியை மேற்கொள்ள இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பெரி யாறு, வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம். அப்பாஸ் கூறியதாவது:

புதிய அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள கூடாது என்று மாதவ் காட்கில் மற்றும் கஸ்தூரிரங்கன் குழு அளித்த அறிக்கைகளை மீறி ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது கண்டனத்துக்குரியது. இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x