Published : 09 Mar 2015 04:11 PM
Last Updated : 09 Mar 2015 04:11 PM

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா: போலீஸ் ஐ.ஜி. நேரில் ஆஜராக வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து காவல் நிலையங்களி லும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவும் வகை யில் போலீஸ் ஐ.ஜி. (நிர்வாகம்) நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஐ.பிரகாஷ்ராஜ், சேஞ்ச் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் ஆகியோர் தனித் தனியாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந் தனர். ‘காவல்நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இதுபோன்ற மனித உரிமை மீறல்களை தடுக் கவும், வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடப்பதற்கும் அனைத்து காவல் நிலையங்களி லும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு, ‘தமிழகத் தில் உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடப்பது குறித்து மார்ச் 9-ம் தேதிக்குள் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும்’ என்று அரசுக்கு உத்தர விட்டனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற முதல்அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள் துறை செயலாளர் மற்றும் டிஜிபி சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், ‘முதல் கட்டமாக 251 காவல் நிலையங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலா 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. ஒன்று நுழைவாயிலிலும், 2 கேமராக்கள் உள்பகுதியிலும் பொருத்தப்பட்டிருப்பதால், காவல் நிலையம் முழுவதும் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியும். மீதமுள்ள காவல் நிலையங்களிலும் படிப் படியாக கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு வருமாறு:

முதல்கட்டமாக 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. இதற்கு 2012-13-ம் ஆண்டுக் கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில் எந்தளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை. மீதமுள்ள காவல் நிலையங்களிலும், இனி புதிதாக தொடங்கவிருக்கும் காவல் நிலை யங்களிலும் எவ்வளவு காலத் துக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்பது பற்றிய தகவலும் இல்லை.

தமிழகத்தில் தற்போது 1,567 காவல்நிலையங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6-ல் ஒருபங்கு இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் உள் ளன. 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு 3 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அப்படியானால் மீதமுள்ள நிலையங்களில் பொருத்துவதற்கு 18 ஆண்டுகள் ஆகுமா?

‘எந்த மாதிரியான கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படுகின்றன, அதில் இரவு நேரத்தில் காட்சிகளைப் பதிவு செய்யும் வசதி இருக்கிறதா, கண்காணிப்பு கேமராக்கள் தடையின்றி இயங்கு வதற்கு தடையில்லா மின்வசதி செய்யப்பட்டுள்ளதா, கண் காணிப்பு கேமரா காவல்நிலை யத்தின் எந்தெந்த பகுதியைக் கண்காணிக்கும், எவ்வாறு காட்சிப் பதிவை சேகரித்து, ஆவணப்படுத்த உள்ளனர்’ என்று மனுதாரரின் வழக்கறிஞர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இவற்றுக்கு விளக்கம் அளிக் கும் வகையில் எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவு வதற்காக போலீஸ் ஐ.ஜி. (நிர்வாகம்) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். பதில் மனுவை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஏப்ரல் 24-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x