Published : 12 Mar 2015 10:04 AM
Last Updated : 12 Mar 2015 10:04 AM
மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நவீன செயற்கை அவயம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் கே.மணிவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில, தேசிய மற்றும் உலக அளவில் நடத்தப்படும் விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகளுக்கு அதிவேகமாக செயல்படத்தக்க சக்திபெற்ற சிறப்பு நவீன செயற்கை அவயங்கள் வழங் கப்படும். ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வீதம் மாநில அளவில் 25 பேருக்கு நடப்பு ஆண்டு முதல் அவை வழங்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு வசதிகளைப் பெற தகுதியுடைய நபர்கள் தங்கள் பெயர் மற்றும் இதர விவரங்களை சென்னையில் உள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணை யரகத்திலோ அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களிடமோ பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT