Published : 17 Mar 2015 08:59 AM
Last Updated : 17 Mar 2015 08:59 AM

மாவட்டத் தலைவர்கள் நியமன விவகாரம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாநகரம் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், அக்கட்சியினர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனுக்கு எதிராக வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் புதிதாக 24 மாவட்டத் தலை வர்கள் அண்மையில் நியமனம் செய்யப்பட்டனர். இதில், வேலூர் மாநகர் மாவட்டத் தலைவராக பி.டீக்காராமன், கிழக்கு மாவட்டத் தலைவராக பஞ்சாட்சரம் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வேலூர் பேலஸ் கபே சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று வைத்த டிஜிட்டல் பேனரில் ‘‘செம்மரக் கடத்தலில் சிக்கி கைதான டீக்காராமன், அரசுப் பேருந்து நடத்துநர் பஞ்சாட்சரம் ஆகியோரை நியமனம் செய்த ஆற்றல் மிக்கத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு நன்றி’’ என குறிப் பிடப்பட்டு இருந்தது.

மேலும், வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் பொதுச்செயலாளர் பி.பி.சந்திரபிரகாஷ் தலைமையில் இளங்கோவனுக்கு எதிராக பேலஸ் கபே சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பி.பி.சந்திரபிரகாஷ் கூறும்போது,

‘‘தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் உயிரோட்டமாக வைத் துள்ளார்.

ஆனால், செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவரையும், அரசுப் பேருந்து நடத்துநரையும் மாவட்டத் தலைவராக நியமித்தது ஏன்? கட்சிக்காக உழைத்தவர்களை ஏன் மறந்தார்கள்?’’ என்றார்.

இதுகுறித்து, மாநகர் மாவட்டத் தலைவர் டீக்காராமன் கூறும்போது, ‘‘போராட்டம் நடத்தியவர்கள், தங்களைத் தவிர மற்றவர்கள் யாருக்கு பதவி கொடுத்தாலும் போராட்டம் நடத்தியிருப்பார்கள். நான் 2013-ம் ஆண்டே மாவட்டத் தலைவர் பதவிக்கு தேர்வானேன். அரசியல் சதி காரணமாக பதவிக்கு வரமுடியாமல் தடுத்துவிட்டனர்’’ என்றார்.

கிழக்கு மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம் கூறும்போது, ‘‘29 ஆண்டுகள் கட்சிக்காக உழைத் துள்ளேன்.

சாதாரண நடத்துநராக இருந்த எனக்கு பதவி அளித்துள்ளார்கள். ஒரு மாதத்தில் ஓய்வுபெறப் போகிறேன். எனது நியமனத்தில் எந்த விதிமீறல்களும் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x