Published : 27 Mar 2015 09:52 AM
Last Updated : 27 Mar 2015 09:52 AM
தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியம் நடத்தவுள்ள காவல்துறை உதவி ஆய்வாளர் போட்டி தேர்வுக்காக, காஞ்சிபுரத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியம் நடத்தவுள்ள உதவி ஆய்வாளர் போட்டி தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நபர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். விருப்புமுள்ளவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளுமாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT