Published : 09 Mar 2015 09:33 AM
Last Updated : 09 Mar 2015 09:33 AM

காவல்துறை தொடர்பான தகவல்களை இணையம் மூலம் அறியும் வசதி: திருவள்ளூர் எஸ்பி தகவல்

காவல்துறை தொடர்பான தகவல்களை இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்துக் கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சட்டம் ஒழுங்கு மற்றும் சீரான போக்குவரத்தை பராமரித்தல், குற்றங்களை தடுத்தல் ஆகிய வற்றை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்தும் தொடர் நட வடிக்கைகளில் தமிழக காவல் துறை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், காவல்துறை சம்பந்தப் பட்ட தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதள சேவைகளை (online services) காவல் துறை செயல் படுத்தி வருகிறது.

இந்த இணைய தள சேவை வழியாக காணாமல் போனவர் களின் விபரங்கள், அடையாளம் தெரியாத உடல்கள், இணைய வழி புகார்கள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் 24 மணிநேரமும் சுலபமாக தெரிந்துக் கொள்ள www.tnpolice.gov.in என்ற இணைய தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சாம்சன் கூறியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x