Published : 18 Mar 2015 09:20 AM
Last Updated : 18 Mar 2015 09:20 AM
மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விவசாய அமைப்பு கள் ஏற்பாடு செய்துள்ளன. சென்னையில் 21-ம் தேதி நடக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சி தலைவர்களையும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கமலாலயத்தில் நேற்று சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர் களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
தமிழக விவசாயிகள் பிரச்சினை களைத் தீர்க்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு, காவிரி யில் அணைகள் கட்டுவது தமிழக விவசாயிகளுக்கு விரோதமான செயல். இதற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி அளித்ததற் கான குறிப்புகள் எதுவும் வெளி யாகவில்லை. இந்தச் சூழலில் மத்திய அரசை குற்றம் சொல்வது நியாயமில்லை. விவசாயிகள் நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் யார் கலந்துகொள்வது என்பதை பரிசீலித்து அறிவிப்போம்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT