Published : 03 Mar 2015 08:33 AM
Last Updated : 03 Mar 2015 08:33 AM

கச்சத்தீவை மீட்டல் என்னும் மாயை: எழுத்தாளர் ஜோ டி குரூஸ் ஆய்வில் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன் வைக்கும் முழக்கம், கச்சத்தீவை மீட்டேத் தீர வேண்டும் என்பதுதான்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு கச்சத் தீவை வழங்கினார். அந்த முடி வானது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்துக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வில்லை. ஆகவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது என்றும் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் குரல் எழுப்புகின்றன. ஆனால் அப்படித் திரும்பப் பெறுவதால் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு துளியளவும் தீர்வு ஏற்படாது என்கிறார் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.

சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண் டதற்கிணங்க, பாக் வளைகுடா மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித் திருக்கும் ஜோ டி குரூஸ், கச்சத்தீவைத் திரும்பப் பெற்றால், சர்வதேச எல்லையை திருத்தி வரையறுக்க வேண்டிய நிலைமைக்கு இந்தியா தள்ளப்படும் என்கிறார். அப்படி வரையறுக்கும் பட்சத்தில், தமிழக மீனவர்கள் கச்சத்தீவைத் தாண்டி செல்ல முடியாது என்று வாதிடுகிறார். இப்போது கச்சத் தீவில் இருந்து 35 கடல் மைல்கள் (நாட்டிகல்) தூரம் வரைக்கும் தமிழக மீனவர்கள் பயணம் செய்து மீன் பிடித்து வருகி றார்கள். அதேநேரத்தில், 1976-ம் ஆண்டு இந்திய-இலங்கை உடன் பாட்டில் ஏற்பட்ட திருத்தம், சட்டப்படி எந்த அந்தஸ்தையும் பெறவில்லை யென்றும், முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு சாதகமான உடன் பாடு என்றும் தன்னுடைய அறிக்கை யில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை இன்று மீனவர்கள் சந்திக்கும் மிகப் பெரியப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது வணிகரீதியாக மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார்கள் பொருத்தப்பட்ட டிராலர்கள்தான் (இழுவை மடிகள்).

பவளப்பாறைகளை உடைத் தெறிந்து, மீன்களின் வாழ்விடத் தையும், இனப்பெருக்கம் செய்யும் இடங்களையும் அழித்தொழித் திருக்கும் இந்த டிராலர்களால்தான் தமிழக மீனவர்கள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகி வருகின்றனர்.

“இரண்டு நாட்களுக்கு முன்பு கூட புனித அந்தோணியார் திருவிழா வுக்காக கச்சத்தீவுக்கு சென்றிருந் தேன். அங்கிருக்கும் இலங்கை மீனவர்கள் சொல்வதெல்லாம் தமிழக மீனவர்கள் தாராளமாக மீன் பிடிக்க வரலாம். ஆனால் டிராலர்கள் தான் எங்கள் மார்பை உடைக்கின்றன என்கிறார்கள்” என விளக்கினார் ஜோ டி குரூஸ்.

பாரம்பரிய முறைப்படி மீன்பிடிக் கும்போது மீன்களுக்கு தக்கப்படி வலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் முழு வளர்ச்சியடையாத மீன்களும் குஞ்சுகளும் தப்பிச் சென்று விடும். அத்துடன் வலைகள் கடலின் அடிமட்டம் வரை விரிக் கப்படாததால் ஒட்டுமொத்தமாக அரித்து எடுக்கப்படும் நிலைமை ஏற்படுவதில்லை.

பாக் வளைகுடா பகுதியை பாரம்பரிய மீன்பிடிப்புக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆழமாக வலியுறுத்தும் குரூஸ், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி சில முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு டீசல் மானியத்தை அதிகரிக்க வேண்டும், எரிபொருளுக்கு வரி விதிக்கக் கூடாது, மீன்களை கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், மீன்பிடி படகுகள் வந்துசெல்வதற்கு வசதியாக பாம்பன் பாலத்தை நவீனப்படுத்த வேண்டும், மன்னார் வளைகுடாவில் மூக்கையூரை ஆதாரமாகக் கொண்டு ஒரு ஆழ்கடல் மீன் பூங்காவும் நாகப்பட்டினத்தை ஆதாரமாகக் கொண்டு மற்றொரு பூங்காவும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை அவரது பரிந்துரைகளில் அடங்கும்.

ஆக மீனவர்களின் பிரச்சினைக் கான தீர்வு என்பது கச்சத்தீவை மீட்பது என்ற மாயையில் இல்லாமல், அதைத் தாண்டி பாரம்பரிய மீன்பிடித்தல் என்ற உரிமையில் உள்ளது. மீன்பிடித்தல் தொடர்பாக இதுவரை நாம் பின்பற்றி வரும் சட்டங்கள் அனைத்தையுமே பாரம் பரிய மீனவர்களோடு கலந்தா லோசித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது என்கிறார் குரூஸ்.

ஆழ்கடல் மீன்பிடிப்பு

ஆழ்கடல் மீன்பிடிப்பில் நம்முடைய மீனவர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் இன்றைய நெருக்கடி நிலையில் இருந்து மீளலாம் என்பது ஜோ டி குரூஸின் வாதம். “ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் இந்தியாவின் வரம்புக்கு உட்பட்ட “வெட்ஜ் பாங்க்” பகுதியிலிருந்து இலங்கை மீனவர்கள் நீல மற்றும் மஞ்சள் செதில்களுடைய சூரை மீன்களை (டியூனா) அள்ளிச் செல்கிறார்கள். சர்வதேசச் சந்தையில் இந்த மீனுக்கு அதிகப்படியான கிராக்கி உள்ளது. ஆனால் அழிந்துகொண்டிருக்கும் பாக் வளைகுடாவில் பொருளாதார ரீதியாக எந்தப் பயனையும் அளிக்காத மீன்களுக்காக நம்முடைய மீனவர்கள் உயிரை இழந்து வருகிறார்கள்” என்று கூறுகிறார் குரூஸ். 1976-ம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி வெட்ஜ் பாங்க் பகுதியில் மீன்பிடிப்பதை 1981-ம் ஆண்டிலிருந்து இலங்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான ஒரு அங்கமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x