Published : 09 Mar 2015 10:40 AM
Last Updated : 09 Mar 2015 10:40 AM

தமிழகத்தின் முக்கிய பிரச்சினை மது, ஊழல்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் மது, ஊழல் என குற்றஞ்சாட்டினார் மக்களவை உறுப்பினரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ். கரூரில் நேற்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மது, ஊழல் ஆகியவை தமிழகத்தின் இரு முக்கிய பிரச்சினைகள். நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்காகத்தான் இருக்கும். தமிழகத்தில் எங்கும், எதிலும் ஊழல் நடக்கிறது. 18 துறைகளின் ஊழல்கள் குறித்து தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

காவிரி மணலை சுரண்டிவிட்ட னர். இதற்கு திமுக, அதிமுக இரண் டுமே உடந்தை. தூத்துக்குடியில் 20 ஆண்டுகளாக கார்னைட் தாது மணல் கொள்ளை நடந்துள்ளது. ஆவின் பாலில் 10 ஆண்டுகளாக தண்ணீரை கலந்து ஊழல் நடந்துள்ளது.

தமிழகத்தில் நிர்வாகம் செயல் படவில்லை. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. நிதிநிலை மிக மோசமாக உள்ளது. ரூ.4 லட்சம் கோடி கடன் சுமையில் தமிழகம் தள்ளாடுகிறது. புதியவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் மனநிலை யில் மக்கள் உள்ளனர். அந்த மாற்று அமைப்பாக பாமக இருக்கும்.

பாமக ஆட்சிக்கு வந்தால் கட்டணமில்லா கட்டாயக் கல்வி வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளில் சுகாதார வசதி மேம்படுத்தப்படும். வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து விலை நிர்ணயம் செய்யும் உரிமை வழங்கப்படும். அனைத்து முக்கிய ஆறுகளிலும் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைக்கப்படும். 30 நாட்களில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும். விளைநிலங்களை கையகப்படுத்துதல் தடை செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x