Published : 10 Apr 2014 11:43 AM
Last Updated : 10 Apr 2014 11:43 AM
சென்னை நங்கநல்லூர் 6-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் மின்தடை ஏற்படுவது குறித்து ‘தி இந்து’ செய்தி வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி யில் கூடுதலாக 100 கே.வி. திறன்கொண்ட புதிய டிரான்ஸ் பார்மரை மின்வாரியத்தினர் அமைத்துள்ளனர்.
நங்கநல்லூர் 6-வது பிரதான சாலையில் இருக்கும் இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் அம்பேத்கர் தெரு, நங்கநல்லூர் உள்ளகரம் இணைப்பு பகுதி உட்பட 6 தெருக்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப் பட்டு வருகிறது. புதிய டிரான்ஸ்பார்மரால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று மகிழ்ச்சி யுடன் கூறிய அப்பகுதியினர் ‘தி இந்து’வுக்கும், மின்வாரியத் தினருக்கு நன்றி கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT