Published : 24 Mar 2015 10:33 AM
Last Updated : 24 Mar 2015 10:33 AM

ஏப்.29-ல் ரயில் பயணிகள் சங்கத்தினர் சென்ட்ரலில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 29-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ரயில் பயணிகள் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அனைத்து ரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம் நேற்று முன் தினம் திருநின்றவூரில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.மூர்த்தி, பொதுச் செயலாளர் மாசிலாமணி, திருநின்றவூர் ரயில் பயணிகள் சங்க தலைவர் முருகையன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சென்னை-அரக் கோணம் இடையே 30 நிமிடங் களுக்கு ஒரு ரயிலும் இயக்கப் பட வேண்டும். அரக்கோணத் தில் இருந்து கும்மிடிப் பூண்டிக்கு நேரடி ரயில் சேவை இயக்க வேண்டும். தற்போது இயக்கப்பட்டு வரும் 9 பெட்டிகள் கொண்ட அனைத்து புறநகர் மின்சார ரயில்களையும் 12 பெட்டிகளாக மாற்ற வேண்டும்.

மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் கோவை, பிருந்தாவன், பழநி விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பன உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 29-ம் தேதி சென்னை சென்ட்ரலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x