Published : 13 Mar 2015 09:04 AM
Last Updated : 13 Mar 2015 09:04 AM

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மருத்துவர் நீதிமன்றத்தில் ஆஜர்: மகளின் புகாரை மறுத்து தாய் கண்ணீர்

காப்பகத்தில் இருந்து கடத்தப் பட்டதாக கூறப்பட்ட பெண் மருத்துவர் சாந்தினியை போலீ ஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரது புகார்களை மறுத்து தாய் கண்ணீர் பேட்டி அளித்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த இர்வின் பட்டுராஜ் என்பவரின் மகள் சாந்தினி. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். அங்கு ஒரு மருத்துவருடன் சாந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டு்ள்ளது. அந்த மருத்துவர் ஏற்கெனவே திருமண மானவர் என்பதால், விஷயம் அறிந்த சாந்தினியின் பெற்றோர் சாந்தினியைக் கண்டித்துள்ளனர்.

இதையடுத்து, சாந்தினி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொ லைக்கு முயன்றதை அடுத்து, அவருக்கு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இங்குள்ள பெண்கள் காப்பகத்தில் அவரை சேர்த்து கவுன்சிலிங்கும் அளிக்கப்பட்டது.

நேற்று சாந்தினி கடத்திச் செல்லப்பட்டதாக காப்பக நிர்வா கிகள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விசாரணை நடத்தி நெல்லை, வண்ணார்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் இருந்த சாந்தினியைப் பிடித்தனர். அவரை விசாரணைக்காக மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது `தான் கடத்தப்படவும் இல்லை. தனக்கு மனநிலையும் பாதிக்கப் படவில்லை’என்று போலீஸாரிடம் சாந்தினி தெரிவித்ததுடன், தனது தந்தையின் மீதும், குடும்பத்தினரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சரமாரியாக சுமத்தினார்.

இதனிடையே திருநெல் வேலிக்கு வந்திருந்த சாந்தினியின் தாய் வசந்தா கூறியதாவது: எனது கணவர் மீது சாந்தினி கூறும் புகார்களில் எதுவுமே உண்மை யில்லை. படித்த பின் சென்னையில் டாக்டர் தினேஷ் என்பவருடைய மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றாள்.

சாந்தினிக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்தோம். ஆனால், டாக்டர் தினேஸை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தாள். டாக்டர் தினேஷ் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவருக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். எனவே அவரை காதலிப்பது தவறு என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். எனது மகளை திருமணம் செய்து எங்கள் சொத்தை அபகரிக்க டாக்டர் தினேஷ் திட்டமிட்டுள்ளார்.

எனது மகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகவே திருநெல்வேலியில் மனநல காப்பகத்தில் சேர்த்தோம். அவளை கடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு எனது கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள் என்றார் அவர்.

போலீஸார் நடத்திய விசாரணைக்குப் பின் நேற்று மாலையில் திருநெல்வேலி 1-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சாந்தினி ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். தான் சென்னைக்கு செல்ல விரும்புவதாகவும், உறவினர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாஜிஸ்திரேட்டிடம் சாந்தினி கோரிக்கை வைத்தார். இதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x