Published : 24 Mar 2015 10:19 AM
Last Updated : 24 Mar 2015 10:19 AM
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக பால் ஆர்டர் கொடுப்ப வர்களுக்கு கல்யாண மண்டபங் களிலேயே நேரடியாக விநியோகம் செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை முதற்கட்டமாக சென்னையில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பின்னர் மற்ற மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல்காரர்கள், ஆவின் நிர்வாகத்தினர் இடையே கடந்த வாரம் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவல கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆவின் பாலுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுத்தால் நேரடியாக திருமண மண்டபத்திலேயே பாலை விநியோ கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, ஆவின் பாலை நேரடியாக ‘பல்க் சப்ளை’ செய்ய திட்டமிட்டு ஆவின் நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளில் இறங் கியுள்ளது.
சமையல்காரர்களுக்கு ஆவின் பால் ‘பல்க் சப்ளை’ செய்யும் முறை 2009-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. மொத்தமாக ஆர்டர் தருபவர்கள் ஆவின் மண்டல அலுவலகங்களுக்கு தாங்களே வந்து பாலை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆவின் நிர்வாகம் பால் கொள் முதல் கணிசமாக குறைந்ததே இதற்கு காரணம். ஆனால் தற் போது ஆவின் பால் கொள்முதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு (27.39 லட்சம் லிட்டர்) அதிகரித்துள்ளது. எனவே முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட ‘பல்க் சப்ளை’ திட்டத்தை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது:
‘‘திருமணம் போன்ற விசேஷங்களுக்கு சுமார் 50 ஆயிரம் லிட்டர் அளவுக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில் சமையல் காரர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஆவின் பாலை நேரடியாக மண்டபங்களில் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பால் விநியோகஸ்தர் களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை போல் ஆவின் பாலை மொத்தமாக ஆர்டர் செய்யும் சமையல்காரர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT