Published : 10 Mar 2015 09:59 AM
Last Updated : 10 Mar 2015 09:59 AM

அந்நிய முதலீட்டைக் கண்டித்து காப்பீட்டுத் துறை ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்: கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த வகை செய் யும் மசோதாவை மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியதைக் கண்டித்தும், பொதுத்துறை காப் பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு வழி செய்யும் மசோதாவை நாடாளுமன்ற நெறி முறைகளை மீறி நிறைவேற்றி யுள்ளதைக் கண்டித்தும் காப் பீட்டுத்துறை ஊழியர்கள் நேற்று தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பாரிமுனையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய காப்பீட்டுத் துறை ஊழியர்கள் சங்கம் சென்னை மண்டலம் 2-ன் பொதுச் செயலாளர் கே.மனோகரன் தலைமை வகித்தார். அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய காப்பீட்டுத் துறை ஊழியர்கள் சங்கம் சென்னை மண்டலம் 1-ன் தலைவர் எல்.பழனியப்பன், தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் எம்.குன்னிகிருஷ்ணன், கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

போராட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்கள் கூறியதாவது:

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் மசோதாவை பாஜக அரசு கடந்த 6 ஆண்டுகளாக எதிர்த்து வந்தது. ஆனால், தற்போது பதவிக்கு வந்த 9 மாதங்களுக்குள்ளாக அதே மசோதாவை நிறைவேற்றியிருப்பது நியாயமற்ற செயலாகும்.

மேலும், மாநிலங்களவையில் ஒரு மசோதா நிலுவையில் இருக்கும்போதே மக்களவையிலும் மசோதாவை நிறைவேற்ற முனைந்திருப்பது நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு முரணானது ஆகும்.

தற்போதைய வேலை நிறுத்தத் தில் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 3 மற்றும் 4-ம் பிரிவு ஊழியர்கள் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் பங்கேற் றுள்ளனர். சென்னையில் மட் டும் 1,500 ஊழியர்கள் பங் கேற்றுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோடிக்கணக் கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது.

அடுத்தக் கட்டமாக, மக்களைச் சந்தித்து இவ்வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து விளக்க உள்ளோம். மேலும், தொடர் வேலை நிறுத்தம் நடத்துவது குறித்தும் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x