Published : 07 Mar 2015 09:51 AM
Last Updated : 07 Mar 2015 09:51 AM

சமூக மாற்றத்தில் வழக்கறிஞர்களுக்கு அதிக பொறுப்பு: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா பேச்சு

சமூக மாற்றத்தில் வழக்கறிஞர்கள் அதிக பங்காற்றியுள்ளனர் என்றும் அவர்களுக்கு அதிக பொறுப்பு உண்டு என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா கூறியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி கல்லூரி மாணவிகளுக் கான சட்ட விழிப்புணர்வு முகாம்கள் சென்னையில் நேற்று தொடங்கின. சென்னை சட்டக் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, மதுரை லேடி டோக் கல்லூரி உள்ளிட்ட பத்து கல்லூரிகளில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களை தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா கூறும்போது, “தேசிய தலைவர்கள் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோர் வழக்கறிஞர்களாக இருந்தவர்கள். ரயிலிலிருந்து காந்தியை கீழே தள்ளியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். ஆனால் அவர்கள் நாட்டைவிட்டே வெளியேற காரணமாக இருந்தவர் காந்தி. பெண்கள் பாரம்பரியமாக தங்களது உரிமைகளுக்காக போராடியும் வழக்காடியும் வென் றுள்ளனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிருதம் அம்மையார் ஆகியோர் தேவதாசி முறையை ஒழிக்க கடுமையாக போராடினர். முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில், தேவதாசி முறையை எதிர்த்து தைரியமாக பேசினார். சட்ட மாணவர்கள் செயல்பாட்டாளர்களாக மாறி பெண்களின் உரிமைகளுக்காக போராட முடியும்.

வழக்கறிஞர்கள் சமூக மாற்றத்தில் அதிக பங்காற்ற முடியும். அவர்களுக்கு அதிக பொறுப்பு உண்டு” என்றார்.

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் லதா பிள்ளை பேசும்போது, “ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டே யிருக்கின்றன.

நான் 20 வயது பெண்ணாக இருந்தபோதை விட இப்போது தான் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாக கருதுகிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஒருங் கிணைப்பாளர் பெண் வழக் கறிஞர்கள் கூட்டமைப்பின் தலை வர் கே.சாந்தகுமாரி பேசுகையில், ‘‘நிர்பயாவுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. பெண்களுக்கு தங்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு வேண்டும்’’ என்றார்.

இந்த முகாம்களின் போது பெண்களுக்கு எதிரான குற்றங் கள் என்ன, அதற்கு என் னென்ன சட்டங்களில் என் னென்ன தண்டனைகள் வழங்கப்படு கின்றன, சட்டத்திலேயே உள்ள பாலியல் பாகுபாடு ஆகியவை விவாதிக்கப்படும்.

‘பெண்ணே சட்டம் அறிவாய், உரிமை பெறுவாய்’ என்ற சட்ட கையேடை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பி.வணங்காமுடி, அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முதல்வர் கே.முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x