Last Updated : 31 Mar, 2015 10:34 AM

 

Published : 31 Mar 2015 10:34 AM
Last Updated : 31 Mar 2015 10:34 AM

பாகிஸ்தானில் இந்துக்களை பாதுகாத்த முஸ்லிம்களுக்கு நெல்லையில் பாராட்டு: மதநல்லிணக்கத்தை உணர்த்திய முன்மாதிரி நிகழ்ச்சி

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் எத்தனையோ விழாக்கள் நடந்திருக்கின்றன. அவற்றிலிருந்து வித்தியாசமாக, அதேநேரத்தில் அர்த்தமுள்ளதாக எளிமையாக ஒரு விழா திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் புதூரில் நேற்று நடத்தப்பட்டது.

இந்த விழாவை தனது சொந்த செலவில் முன்னின்று நடத்தியவர் இந்து சமயத்தை சேர்ந்த பி.ராமநாதன், விழா நடத்துவதற்கு இடம் தந்தவர்கள் ஆர்.சி.கிறிஸ்தவ தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர். விழா தலைவரும் கிறிஸ்தவர். முஸ்லிம் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்கள். இவ்வாறு மும்மதத்தவரும் பங்கேற்ற இந்த விழாவில் அப்படியென்ன விசேஷம்?

பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக் கள் ஹோலி பண்டிகை கொண்டாடு வதற்காக, அந்நாட்டு முஸ்லிம்கள் பாதுகாப்பு அளித்தனர். அவர் களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப் பதற்காக நம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் பொட்டல்புதூரில் விழா நடைபெற்றது. இதனாலேயே இதற்கு முக்கியத்துவம் அதிகம்.

இதுபோல், பாகிஸ்தானில் இந்துக் களை பாதுகாத்த, இன்னும் பாது காத்துவரும் முஸ்லிம் சகோதரர் களுக்கு பாராட்டு தெரிவிக்கும் மத நல்லிணக்க விழாக்கள் நாடு முழுக்க நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த விழாவை நடத்தியவர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு. அதன்மூலம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மட்டுமின்றி உலகளவில் மதநல்லிணக்கம் பேணப்படுவதற்கு அது ஊக்கமாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பாராட்டுதல் அவசியம்

வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர் பி.ராமநாதன் கூறியதாவது:

முஸ்லிம்கள் பெரும்பான்மை யினராக வசிக்கும் நாடு பாகிஸ்தான். அங்கு சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாத பயங்கரவாதிகள், சிறுபான் மையினரான இந்துக்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் மட்டுமின்றி முஸ்லிம்களிலேயே மற்றொரு பிரிவினர் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் கொடூரமான தாக்குதல்கள் நடத்துகிறார்கள்.

அதே சமயம் மனித நேயமும், மத நல்லிணக்க உணர்வும் மிக்கவர்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ளது போலவே பாகிஸ்தானிலும் உள்ளனர். பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு அருகிலுள்ள இமாம் பர்கா பகுதியிலுள்ள நாராயணசாமி கோயிலில் இந்துக்கள் இந்த மாதம் ஹோலி பண்டிகை கொண் டாடியபோது அங்குள்ள முஸ்லிம் கள், குறிப்பாக பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட்டமைப்பினர் மனித கேடயமாக திகழ்ந்து, ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்துக்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.

மனிதநேயமும், மத நல்லிணக்க உணர்வும்மிக்க அந்த முஸ்லிம் சகோதரர்களைப் பாராட்ட வேண்டும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவை நடத்தினோம்.

விழாவின் முக்கியத்துவம் கருதி இந்த விழா அழைப்பிதழ்கள் தமிழக எல்லைக்கு அப்பால் குடியரசு தலைவர், பிரதமர், பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட்டமைப்பு, பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டது’ என்றார் அவர்.

நல்லிணக்க விழாக்கள்

மதநல்லிணக்கத்தை நோக்க மாகக் கொண்டு பொட்டல்புதூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கிறிஸ்துமஸ் விழா ஆகியவற்றையும் ராமநாதன் நடத்தி வருகிறார். முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரி விக்கும் விழாவுக்கு தலைமை வகித்த அம்பை கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் எம்.மைக்கேல் பொன்ராஜ் கூறியதாவது:

‘‘மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த விழாவின் மூலம் இந்திய அரசு, பாகிஸ்தான் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் என்று நம்புகிறோம். இங்குள்ள மதநல்லிணக்க பண் பாளர்களின் உணர்வுகள் பாகிஸ்தானி லுள்ள மதநல்லிணக்கம் பேணும் சகோதரர்களை சென்றடையும்.

இந்தியாவின் எதிரி நாடு என்று முத்திரை குத்தப்பட்டுள்ள பாகிஸ் தானிலுள்ள பண்பாளர்களுக்கு நடத்தும் இந்த பாராட்டு விழா, நம் நாட்டிலும் மதநல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும். இவ்விழாவை நாடு முழுக்க நடத்த வேண்டும்’’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x