Published : 10 Apr 2014 11:39 AM
Last Updated : 10 Apr 2014 11:39 AM
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 30 சுயேச்சைகள் உட்பட 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளான புதன்கிழமை வேட்பாளர்கள் யாரும் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறவில்லை. இதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 5 பேர் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள். 30 பேர் சுயேச்சைகள், 7 பேர் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள். இவர்கள் அனைவருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
இத்தொகுதியில் 42 பேர் போட்டியிடுவதால் ஒரு பூத்துக்கு 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. எனவே ஏற்கெனவே உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் போதாது என்பதால் புதிய இயந்திரங்களை வேறு மாநிலங்களிலிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடசென்னையில் 40 பேர்
வடசென்னை நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, தி.மு.க வேட்பாளர் கிரிராஜன், காங்கிரஸ் வேட்பாளர் பிஜூசாக்கோ, தே.மு.தி.க வேட்பாளர் சவுந்தரராஜன், பகுஜன் கட்சி சார்பில் ஜெனார் தனன், ஆம் ஆத்மி கட்சி வேட் பாளர் சீனிவாசன் உட்பட 51 பேர் 66 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில், மொத்தம் 45 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், புதன்கிழமை 5 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதை யடுத்து, வடசென்னை மக்களவை தொகுதி 40 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
மத்திய சென்னையில் 20 பேர்
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய தேசிய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மக்கள் மாநாடு கட்சி, நேஷனல் வெல்பேர் கட்சி மற்றும் சமதா கட்சி ஆகியவற்றின் சார்பிலும், சுயேட்சைகள் சார்பிலும், மொத் தம் 43 மனுக்கள் தாக்கலாகின.
மனுக்கள் மீதான பரி சீலினையின் போது, மொத்தம் 20 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி அருள் சுந்தர் தயாளன் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் குழுவினர், புதன்கிழமையன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சின்னங்களையும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு குலுக்கல் முறையிலும் சின்னங்களை ஒதுக்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT