Published : 16 Mar 2015 10:37 AM
Last Updated : 16 Mar 2015 10:37 AM
அரபிக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் கடலோர மாவட்டங்களிலும் வட உள் மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் நகர்ந்து அரபிக் கடலில் இலங்கை மற்றும் தலை மன்னாருக்கு இடையே நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்தது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று லட்சத்தீவு அருகே நிலை கொண்டிருந்தது. மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத் தீவுகளுக்கும் மகாராஷ்டிரத்துக்கும் இடையே உருவாகியுள்ளது.
இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங் களிலும் வட தமிழகத்தின் உள் மாவட்டங் களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 2 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT