Published : 13 Mar 2015 11:33 AM
Last Updated : 13 Mar 2015 11:33 AM
தொழில் முனையும் மாணவர்களுக் காக ‘தோனி 2015’ என்ற போட்டியை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சர்ப்ரைஸ் சொல்யூஷன்ஸ் இணைந்து நடத்துகின்றன. மார்ச் மாத இறுதியில் நடத்தப் படும் இந்தப் போட்டியில் சென்னை யிலுள்ள கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
இந்தப் போட்டிக்கான தொழில் நுட்ப உதவிகளை செய்து தரும் சர்ப்ரைஸ் சொல்யூஷன்ஸ் நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சி.கவுதம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கூறும் போது, “போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு ரூ.1000 வழங்கப்படும். அவர்கள் அந்த பணத்தை போட்டியின் முடிவில் (30 மணி நேரம்) பல மடங்காக ஆக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் மாண வர்கள் பெறும் லாபத்தை விட அவர்கள் கொண்டிருக்கும் நிர் வாகத் திறன், விளம்பர நடவடிக் கைகள், மனித வள மேலாண்மை திறன் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மாணவர்கள் படிக்கும்போதே தொழில் உலகம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இதில் அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழக மாணவர்கள், பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ரவிக்குமார் கூறும்போது, “சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 120 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மாணவர்களின் தொழில் முனையும் பண்புகளை வளர்ப்ப தற்காக அனைத்து கல்லூரிகளிலும் தோனி போட்டி குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துவோம்” என்றார்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள வரும் 20-ம் தேதி வரை www.dhoni2015.com என்ற இணை யத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT